காளி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
காளி | |
---|---|
இயக்கம் | ஐ. வி. சசி |
தயாரிப்பு | ஹேம் நாக் ஹேம் நாக் பிலிம்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் சீமா |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
வெளியீடு | 3 ஜூலை 1980 (தமிழ்) 19 செப்டம்பர் 1980 (தெலுங்கு) |
நீளம் | 3959 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
காளி (Kaali) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சீமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2] இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது, தெலுங்கில் விஜயகுமாருக்கு பதிலாக சிரஞ்சீவி நடிக்கிறார். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசையமைத்துள்ளார். காளி பாக்ஸ் ஆபிஸ் தோல்வியடைந்தது மற்றும் சென்னையில் 56 நாட்கள் ஓடியது.
நடிகர்கள்
- ரஜினிகாந்த்- காளி
- விஜயகுமார்(தமிழ்)/சிரஞ்சீவி (தெலுங்கு)- ஜி.கே
- சீமா - அனிதா/கீதா
- படாபட் ஜெயலட்சுமி
- மேஜர் சுந்தர்ராஜன்- சம்பத்
- மனோரமா- தாயம்மா
- சுருளி ராஜன்- சொக்கு
- சுபா- சம்பத்தின் மனைவி
- வெண்ணிற ஆடை நிர்மலா- ரஜினிகாந்தின் தங்கை
- வி. கோபாலகிருஷ்ணன்- சோமு
- காந்த ராவ்
- கைகலா சத்ய நாராயணா - ராஜாராம்
- பிரசாத் பாபு
- கிரி பாபு
- அனுராதா ஸ்ரீராம்- குழந்தை நட்சத்திரம்
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப்- குழந்தை கலைஞர்
- குமரிமுத்து
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[3] [4]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "அடி ஆடு" | மலேசியா வாசுதேவன் | கண்ணதாசன் | 4:39 |
2 | "அழகழகா" | பி. சுசீலா | 4:46 | |
3 | "பத்ரகாளி உத்தம" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வைரமுத்து | 4:00 |
4 | "தித்திக்கும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கல்யாண், எஸ். பி. சைலஜா | கண்ணதாசன் | 4:33 |
5 | "வாழ்வுமட்டும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:46 |
மேற்கோள்கள்
- ↑ S.B., Vijaya Mary (22 August 2002). "Ready for the challenge". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20021025055006/http://thehindu.com/thehindu/mp/2002/08/22/stories/2002082200960100.htm.
- ↑ "Superstar's next with Ranjith titled Kaali?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 July 2015. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Superstars-next-with-Ranjith-titled-Kaali/articleshow/48170308.cms.
- ↑ "Kaali Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart (in English). பார்க்கப்பட்ட நாள் 1 October 2021.
- ↑ Ramachandran 2014, Chapter 7:The 1980s – 32/59.