கால் ஆணி
| கால் ஆணி (காலஸ்) | |
|---|---|
| கால் பாதத்தில் காணப்படும் காணப்படும் கால் ஆணி | |
| சிறப்பு | தோல் மருத்துவம் |
| சிக்கல்கள் | தோல் அழற்சி, தோல் தொற்று |

கால் ஆணி அல்லது காலஸ் (callus) (பண்மை:calluses) என்பது தடிமனான மற்றும் சில நேரங்களில் கடினப்படுத்தப்பட்ட தோலின் ஒரு பகுதியாகும். இது கால் பாதங்களிலும் மற்றும் உள்ளங்கைகளில் வளரக்கூடியது. இதனை கத்தியால் அறுத்தாலும், உராய்வு, அழுத்தம் காரணமாக மீண்டும் மீண்டும் வளரும். பாதத்தின் அடிப்பகுதியில் கால் ஆணி அதிகம் காணப்படுகிறது. கால் ஆணிகள் பொதுவாக தீங்கு விளைவிப்பதில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட நபரின் பாதங்கள் தரையில் அழுத்துவதால் வலி ஏற்படும். தடித்த கால் ஆணிகளை அடிக்கடி வலுவாக தேய்ப்பதால் கொப்புளங்களை ஏற்பட வாய்ப்புள்ளது.
காரணம்
பொதுவாக நீண்ட காலத்திற்கு அதிகப்படியான உராய்வால் வெளிப்படும் தோலின் எந்தப் பகுதியிலும் கால் ஆணி உருவாகும். கட்டுமானப் பணிகள் மற்றும் கைவினைப் பணிகள், கலைகள்,கைவினைஞர்கள்[1]உணவு தயாரித்தல், விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகள், [2][3][4]மற்றும் பெண்கள் உயர்ந்த செருப்புகள் அணிவது காரணமாக கால் ஆணிகள் ஏற்படுவதாக கருதப்படுகிறது.[5]
மிதமான, நிலையான அழுத்தத்திற்கு எதிர்வினையாக கால் ஆணிகள் கை, கால்கள் மற்றும உடலில் எங்கும் ஏற்படலாம் என்றாலும், அவை பெரும்பாலும் கால்களில், குறிப்பாக குதிகால், சிறிய கால் விரல்களின் அடிப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது.
உயிரியல் ரீதியாக, தோலின் வெளிப்புற அடுக்கில் கெரடினோசைட்டுகளின் திரட்சியால் கால் ஆணிகள் உருவாகிறது. . கால்ஸ் செல்கள் இறந்து போனது என்றாலும், இணைக்கப்பட்ட புரத வலையமைப்புகள் மற்றும் பல டைசல்பைட் பிணைப்புகளைக் கொண்ட ஹைட்ரோபோபிக் கெரட்டின் இடைநிலை இழைகள் காரணமாக அவை இயந்திர மற்றும் வேதியியல் சேதத்திற்கு மிகவும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது.[6]இது உள்ளங்கையில் அளவுக்கு அதிகமாக உராய்வு ஏற்படுவதால் கொப்புளம் அல்லது தோல் தடுமன் ஏற்படும்.
தடுப்பு
கால் ஆணிகளுக்கு சிகிச்சையளிப்பதை விட தடுப்பது எளிது.கால் ஆணிகள் மீது கடினமான பொருட்களைக் கொண்டு தேய்த்தல் மற்றும் அழுத்தத்தைக் குறைப்பது கால் ஆணிகளை உருவாவதைத் தடுக்கும். தரமான காலணிகள் அணிய வேண்டும்.[7] கையுறைகள் அணியலாம்.
சிகிச்சை

சாலிசிலிக் அமிலம் கொண்ட கெரடோலிடிக் மருந்துகளைக் கொண்டு கால் ஆணிகளின் மீது தேய்ப்பதால் கால் ஆணிகளை கரைக்கலாம். அல்லது ஒரு தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.[8]
மேற்கோள்கள்
- ↑ Sims, Susan E. G.; Engel, Laura; Hammert, Warren C.; Elfar, John C. (2015-08-05). "Hand Sensibility, Strength, and Laxity of High-Level Musicians Compared to Non- Musicians". The Journal of Hand Surgery 40 (10): 1996–2002.e5. doi:10.1016/j.jhsa.2015.06.009. பன்னாட்டுத் தர தொடர் எண்:0363-5023. பப்மெட்:26253604.
- ↑ Grima, Joseph N.; Vella Wood, Michelle; Portelli, Nadia; Grima-Cornish, James N.; Attard, Daphne; Gatt, Alfred; Formosa, Cynthia; Cerasola, Dario (2022-01-05). "Blisters and Calluses from Rowing: Prevalence, Perceptions and Pain Tolerance". Medicina 58 (1): 77. doi:10.3390/medicina58010077. பன்னாட்டுத் தர தொடர் எண்:1010-660X. பப்மெட்:35056385.
- ↑ Emer, Jason; Sivek, Rachel; Marciniak, Brian (2015-04-08). "Sports Dermatology: Part 1 of 2 Traumatic or Mechanical Injuries, Inflammatory Conditions, and Exacerbations of Pre-existing Conditions". The Journal of Clinical and Aesthetic Dermatology 8 (4): 31–43. பன்னாட்டுத் தர தொடர் எண்:1941-2789. பப்மெட்:26060516.
- ↑ Bouchez, Colette (2009-02-09). Chang, Louise (ed.). "Tips to Avoid Foot Pain From High Heels". WebMD (in ஆங்கிலம்). Retrieved 2022-03-10.
- ↑ Bouchez, Colette (2009-02-09). Chang, Louise (ed.). "Tips to Avoid Foot Pain From High Heels". WebMD (in ஆங்கிலம்). Retrieved 2022-03-10.
- ↑ "Transglutaminases: multifunctional cross-linking enzymes that stabilize tissues.". The FASEB Journal 5 (15): 3071–7. Dec 1991. doi:10.1096/fasebj.5.15.1683845. பப்மெட்:1683845. http://www.fasebj.org/content/5/15/3071.long.
- ↑ Erstad, Shannon (6 March 2008). "Foot problems: Finding the right shoes". WebMD Medical Reference from Healthwise. Healthwise. How do I find the right shoes?. Retrieved 2010-06-10.
You should not have to "break in" shoes if they fit properly.
- ↑ Corns and calluses: Treatments and drugs. Mayo Clinic. Retrieved July 23, 2009.