காலெறி கடிகையார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காலெறி கடிகையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாடலால் பெயர் பெற்ற புலவர்களில் இவரும் ஒருவர். இவரது பாடலில் 'காலெறி கடிகை' என்னும் தொடர் காணப்படுகிறது. இப்புலவரின் இயற்பெயர் தெரியாத நிலையில் இவரது தொடரைக்கொண்டே இவருக்குப் பெயரிட்டு இவரைக் குறிக்கலாயினர்.

சங்கநூல்களில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 267.

பாடல் சொல்லும் செய்தி

பொருள் தேடச் செல்ல எண்ணிய தலைவன் தலைவி தரும் இன்பத்தோடு பொருளை ஒப்பிட்டுப் பார்த்து பொருள் தேடச் செல்வதைக் கைவிடும் செய்தியை இப்பாடல் கூறுகிறது.

உவமை

'கரும்பின் காலெறி கடிகைக் கண் அயின்று அன்ன வால் எயிறு ஊறிய வசை இல் தீ நீர்க் கால் அமை குறுந்தொடிக் குறுமகள்'

கடிகை என்பது இங்குக் கரும்பு வெட்டும் கோடாரியைக் குறிக்கும். கடிகைக் கண் என்பது அக்கோடாரியின் வெட்டுமுகம். கால் என்பது கரும்பின் காலாகிய அதன் அடிப்பகுதி. கரும்பு வெட்டும்போது கோடாரி கரும்புச் சாற்றைச் சுவைப்பது போல் அவள் வெண்ப்பற்களில் ஊரும் நீரைச் சுவைத்தேன் என்கிறான் அவன்.

திருக்குறள் ஒப்புநோக்கம்

'பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்' (1121)

"https://tamilar.wiki/index.php?title=காலெறி_கடிகையார்&oldid=12390" இருந்து மீள்விக்கப்பட்டது