காமராசர் காவியம்
காமராசர் காவியம் | |
---|---|
ஆசிரியர்(கள்): | மு. இளங்கண்ணன் |
வகை: | கவிதை |
துறை: | வரலாறு |
இடம்: | சென்னை 78 |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | முருகன் பதிப்பகம் |
பதிப்பு: | முதற் பதிப்பு 2006 |
காமராசர் காவியம் என்பது மு. இளங்கண்ணன் என்பவரால் எழுதப்பட்ட கவிதை நூலாகும். இந்நூல் தமிழக முன்னாள் முதல்வர் காமராசர் குறித்து எழுதப்பட்ட காப்பியவகை தமிழ் இலக்கியமாகும். இது புத்தியற் காலத் தமிழ்க் காப்பியங்களில் ஒன்றாகும்.[1]
கதைச்சுருக்கம்
காமராசரின் பிறப்புடன் தொடங்கும் காவியம், அவரின் இள வயது வாழ்க்கை, அவரின் அரசியல் ஆர்வம் குறித்து தொடர்கிறது. பெரியார் நடத்திய வைக்கம் போரில் பங்கெடுத்தல், காந்தியின் போராட்டத்தில் முனைப்பாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல், மதுரையில் கள்ளுக்கடை மறியல், உப்பு ஒத்துழையாமைப் (சத்தியாகிரகப்) போரில் பங்குகொள்ளுதல், அதனால் முதன் முறையாகச் சிறை செல்லுதல், 1936 இல் விருதுநகர் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெறுதல், தமிழ்நாடு பேராயக் (காங்கிரஸ்) கட்சிக் குழுவின் செயலாளராதல், 1937 இல் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆதல், 1954 இல் காமராசர் தமிழ்நாட்டின் முதலமைச்சராதல், அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணிகள், மக்களுக்கு வழங்கிய பயன்மிகு திட்டங்கள், தொழிற்புரட்சி செய்தல் எனப் பல வகையிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்றியத் தொண்டுகள் என அவரது பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளை எல்லாம் தனித்தனித் தலைப்பிட்ட கவிதைகளால் விளக்கியுள்ளார். இந்நூல் வீறுகொண்ட காப்பிய நடையில் எழுதப்பட்டுள்ளது.