காப்பியஞ் சேந்தனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காப்பியஞ் சேந்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று நற்றிணை 246 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.

தனிப் பெருங் காப்பியம் இயற்றியவர் இப்புலவர் என்பதை இவரது பெயருக்குத் தரப்பட்டுள்ள அடைமொழியால் உணரலாம்.

நற்றிணை 246 பாடல் தரும் செய்தி

  • பாலைத்திணை

நல்ல புள் (விலங்கின ஒலிகள்) கேட்கிறது. நல்ல நிமித்தம் தெரிகிறது. அவர் திரும்புவதாகச் சொல்லிச் சென்ற மழைக்காலமும் வந்துவிட்டது. அவர் பொய் சொல்லமாட்டார். வந்துவிடுவார். கவலை வேண்டாம் என்றெல்லாம் சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

"https://tamilar.wiki/index.php?title=காப்பியஞ்_சேந்தனார்&oldid=12388" இருந்து மீள்விக்கப்பட்டது