காது முடி


காது முடி (Ear hair) என்பது மனிதர்களின் வெளிப்புற செவிப்புல மடலின் உள்ளே உள்ள மயிர் மூட்டுப் பை குருத்தெலும்பிலிருந்து எழும் முனைய முடியாகும்.[1] காது முடி என்பது பரந்த பொருளில், காதின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மெல்லிய இளமயிரையும், குறிப்பாக முன்புற காதின் முக்கிய பகுதிகளில், அல்லது மீமுரண் மயிர்நோய் மற்றும் கோளாற்று மயிருடைமையால் ஏற்படும் அசாதாரண முடி வளர்ச்சியையும் குறிப்பதாக இருக்கலாம். காது முடி குறித்த மருத்துவ ஆராய்ச்சி தற்போது வரை மிகவும் குறைவாகவே செய்யப்பட்டுள்ளது.
வயதுவந்த பிறகு ஆண்களில் காது மடலில் முடி வளர்ச்சி அதிகரிப்பது பொதுவாக காணப்படும் ஒன்றாகும். [2] :206மூக்கில் முடி வளர்ச்சி அதிகரிப்பதும் இதனோடு நடக்கிறது. செவி மடலிலில் வெளியே தெரியும் முடி அழகு காரணங்களுக்காக சில நேரங்களில் வெட்டப்படுகிறது. [3] :97காதில் அதிகப்படியான முடி வளர்ச்சி மருத்துவ ரீதியாக ஆரிகுலர் ஹைபர்டிரிகோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. [4] :125குறிப்பாக இந்திய ஆண்களில் சில ஆண்களுக்கு, புறச்செவி விளிம்பின் கீழ் பகுதியில் கரடுமுரடான முடி வளர்ச்சி உள்ளது, இந்த நிலை " ஹைபர்டிரிகோசிஸ் லானுகினோசா அக்விசிட்டா என்று குறிப்பிடப்படுகிறது. [5]
அமைப்பு

முடி என்பது சருமத்தில் உள்ள நுண்ணறைகளிலிருந்து வளரும் ஒரு புரத இழை ஆகும். இது சருமத்தில் அல்லது தோலில் பதிந்து உள்ளது. உரோமங்களற்ற தோலின் பகுதிகளைத் தவிர, மனித உடல் நுண்ணறைகள் நிறைந்ததாக இருக்கும், அவை அடர்த்தியான முனைய முடியையும், மெல்லிய மென்மயிரையும் உருவாக்குகின்றன. இது முதன்மையாக புரதத்தால் ஆன ஒரு முக்கியமாக கெரட்டினால் ஆன உயிர்ப் பொருளாகும்.
மருத்துவ முக்கியத்துவம்
- காதுகுழலைத் தொடும் அளவுக்கு வளரும் முடி, காதிரைச்சலை ஏற்படுத்தக்கூடும். [6]
- காது முடியில் ஏற்படும் மயிர்க்கால் அழற்சி கடுமையான வெளிக்காது அழற்சியை ஏற்படுத்தக்கூடும். [7]
- மினாக்ஸிடில் சிகிச்சையின் போது வெளிப்புற காதில் வளரும் கடுமையான மீமுரண் மயிர்நோயால் வளரும் அதிகப்படியான முடி காதுகளை மூடுகிறது. இது செவித் துளையில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும், இதன் விளைவாக பகுதி அல்லது முழுமையான காது கேளாமை ஏற்படலாம். [8]
சமூகமும் பண்பாடும்
இந்திய மளிகைக் கடைக்காரரான ராதாகந்த் பாஜ்பாய், 2003 ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிக நீளமான காது முடி கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டார். அவரின் காது முடியின் நீளம் 13.2 செ.மீ. ஆகும். 2009 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், அவரது தலைமுடி 25 சென்டிமீட்டர் நீளத்தை எட்டியபோது, காதின் நீண்ட முடியை அதிர்ஷ்டம், செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாகக் கருதுவதாகக் கூறினார்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
- ↑ W. Steven Pray. "Swimmer's Ear: An Ear Canal Infection" (PDF). Naveh Ltd. Licensed Distributor of Medical Pharmaceuticals. Retrieved March 9, 2016.
- ↑ Leyner, Mark; Goldberg, Billy (July 26, 2005). Why Do Men Have Nipples?: Hundreds of Questions You'd Only Ask a Doctor After Your Third Martini. Crown Publishing Group. ISBN 9780307337047. Retrieved September 8, 2014 – via Google Books (preview).
- ↑ Livingston, Ruth (June 17, 2010). Advanced Public Speaking: Dynamics and Techniques. Xlibris Corporation. ISBN 9781453508039. Retrieved September 8, 2014 – via Google Books (preview).
- ↑ Jackson, Scott; Nesbitt, Lee T. (April 25, 2012). Differential Diagnosis for the Dermatologist. Springer Science & Business Media. ISBN 978-3-642-28006-1. Retrieved October 24, 2014 – via Google Books (preview).
- ↑ "Otoscopy: The Pinna". Hawke Library. Archived from the original on October 26, 2014. Retrieved October 26, 2014.
- ↑ "Tinnitus Signs and Symptoms". UCSF Medical Center (University of California San Francisco). http://www.ucsfhealth.org/conditions/tinnitus/signs_and_symptoms.html.
- ↑ Joseph P Garry (Feb 28, 2010). "Otitis externa". Medscape.com. Retrieved 2012-08-31.
- ↑ Toriumi, MD, Dean; Raymond, Konior, MD; Berktold, MD, Robert (August 1988). "Severe hypertrichosis of the external ear canal during minoxidil therapy.". Arch Otolaryngol Head Neck Surg 114 (8): 918–9. doi:10.1001/archotol.1988.01860200102029. பப்மெட்:3390339.