காட்டுமன்னார்கோயில் திருவனந்தீசுவரர் கோயில்
காட்டுமன்னார்கோயில் திருவனந்தீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் திருவனந்தீசுவரம் என்றழைக்கப்பட்டது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 43 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°16'37.9"N, 79°32'57.0"E (அதாவது, 11.277180°N, 79.549170°E) ஆகும்.
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக திருவனந்தீசுவரர் உள்ளார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். இக்கோயிலில் சூரிய, சந்திர புஷ்கரணி உள்ளது. [1]
அமைப்பு
மூலவர் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் காணப்படுகின்றனர். துர்க்கை, நின்ற நிலையில் விநாயகர், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சோழப் பேரரசியுமான செம்பியன்மாதேவிக்கு திருமணம் நடந்த இடம் என்பதால் அவர் இக்கோயிலுக்கு தன் பெயரால் கொடை தந்துள்ளார். அட்ட நாகங்களில் ஒன்றான அனந்தன் தன் குறையைத் தீர்க்க இக்கோயிலுக்கு வந்ததாகக் கூறுவர். அனந்தன் பூசை செய்ததை உறுதி செய்யும் வகையில் இங்குள்ள சோமாஸ்கந்தர் சிற்பத்தின் கையில் நாகம் உள்ளது. [1]
விழாக்கள்
வைகாசி விசாகம் உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் கொண்டாப்படுகின்றன. [1]