காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார்
பிறப்புகாஞ்சிபுரம்
தமிழ்நாடு
இந்தியா
தலைப்புகள்/விருதுகள்தமிழ்ப் புலவர்
தத்துவம்சைவ சமயம்

காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் (1791-1871) என்பவர் 18 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை , இராமலிங்க சுவாமிகள் , அஷ்டாவதனம் சபாபதி முதலியார் ஆகியோரின் ஆசிரியர் ஆவார்.

தோற்றம்

மகாவித்துவான் சபாபதி முதலியார் சேனைத்தலைவர் குலத்தில் 1791இல் காஞ்சிபுரத்தில் பிறந்தார்.[1] இவர் மகாவித்துவான் என்று அழைக்கப்பட்டவர். காஞ்சி பச்சையப்பன் பள்ளியில் சில காலம் தமிழாசிரியராக இருந்தவர். இவர் உரையாசிரியர் எனவும் சிறப்பிக்கப்பட்டவர்.

சிறப்புகள்

இவரிடம் பயின்ற மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை , இராமலிங்க சுவாமிகள் , அஷ்டாவதனம் சபாபதி முதலியார், சிதம்பரம் சபாபதி பிள்ளை (இராமலிங்க சுவாமிகளின் அண்ணன்) ஆகியோர் ஆவர்.[2] இவரிடம் பயின்ற சிதம்பரம் சபாபதி பிள்ளை(இராமலிங்க சுவாமிகளின் அண்ணன்), குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்து, புராண விரிவுரையாளரானார். சிதம்பரம் சபாபதி பிள்ளை இன் குடும்பம் வறுமையில் இருந்து சற்று மீண்டது. சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் விரும்பினார். ஆனால், இராமலிங்க சுவாமிகள் அவர்களுக்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சிதம்பரம் சபாபதி பிள்ளை.

இராமலிங்க சுவாமிகள் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் இராமலிங்க சுவாமிகளை கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்க சுவாமிகள்,

என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க சுவாமிகள், பாடுவதைக் கண்ட காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.

இராமலிங்க சுவாமிகள் அவரின் அண்ணன் சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார்.[சான்று தேவை]

இயற்றிய நூல்கள்

முதன்முதலில் சைவத் திருமுறைகளை அச்சிற் பதித்தவர் இவர் தான். இவரது தேவாரப் பதிகங்கள் திருஞான சம்பந்த சுவாமிகள் திருமுறை 1864இல் சென்னை கலாநிதி அச்சுக்கூடத்தில் அச்சிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

  • திருஞானசம்பந்த சுவாமிகள் தாலாட்டு
  • திருக்குழந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ்
  • அருணாசல சதகம்
  • நீதிநெறி விளக்கவுரை
  • திருக்கழுக்குன்றச் சிலேடை
  • பிரமோத்தரக் காண்டப் பொழிப்புரை
  • சைவ சமய விளக்க வினாவிடை

பதிப்பித்த நூல்கள்

இவரது சைவ சமய விளக்க வினாவிடையையும் ரெவ்.டி.ஃபவுல்க்ஸ் (T.Foulkes) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். “The work Contains a useful Compendium of Saivism என்று ஜான் மர்டாக் தமது நூலில் கூறியுள்ளார். திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதியை 1837 இல் திருவேங்கடாசல முதலியாரது சரஸ்வதி அச்சுக்கூடத்தில் பரிசோதித்து அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். பல நூல்கள் இவரது மேற்பார்வையில் அச்சிட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.

  • திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி (1837),
  • பரமராசிய மாலை (1836),
  • திருஞானசம்பந்த சுவாமிகள் திருமுறை (1864),
  • தேவாரத் திருப்பதிகத் திருமுறை (1866),
  • சுந்தரமூர்த்தி பதிகம்,
  • திருநாவுக்கரசர் பதிகம் (1867),
  • பெரியபுராணம் (1870)

ஆகிய பதிப்புகளை இவர் வழங்கியுள்ளார். ஆறுமுக நாவலர் 1884இல் பதிப்பித்த பெரியபுராணப் பதிப்பில் 4286 பாடல்களே உள்ளன. ஆயினும், இதற்கு முன் இவர் பதிப்பித்த (1870) பெரியபுராணத்தில் 4299 பாடல்கள் உள்ளன.[3][4]

மறைவு

இவர் 1871 ஆம் ஆண்டு மறைந்தார்.[5]. தமிழக அரசு சென்னை கொண்டித் தோப்பில் உள்ள ஒரு தெருவிற்கு காஞ்சிபுரம் சபாபதி முதலியார் என்று பெயர் அறிவித்து கவுரவப்படுத்தி உள்ளது.

மேற்கோள்கள்