காசல்ரே அணை
காசல்ரே அணை (Castlereigh Dam) களனி ஆற்றின் முக்கிய துணை நதியான கெகல்கமு ஓயாவின் குறுக்கே கட்டப்பட்ட ஈர்ப்பு அணை ஆகும். இலங்கையின் மத்திய மாகாணத்தில், அட்டனுக்கு தென்மேற்கே சுமார் 3 கி.மீ (1.9 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[1]
| காசல்ரே அணை | |
|---|---|
| படிமம்:UG-LK Photowalk - 2018-03-24 - Castlereigh Dam (2).jpg | |
| நாடு | இலங்கை |
| அமைவிடம் | அட்டன், மத்திய மாகாணம் |
| புவியியல் ஆள்கூற்று | 06°52′24″N 80°33′59″E / 6.87333°N 80.56639°E |
| நோக்கம் | மின் ஆற்றல் |
| நிலை | செயல்பாட்டில் உள்ளது |
| திறந்தது | சனவரி 1965 |
| உரிமையாளர்(கள்) | இலங்கை மின்சார சபை |
| அணையும் வழிகாலும் | |
| வகை | புவியீர்ப்பு அணை |
| தடுக்கப்படும் ஆறு | கெகல்கமு ஓயா |
| விமல சுரேந்திர மின் நிலையம் | |
| ஆள்கூறுகள் | 06°54′31″N 80°31′30″E / 6.90861°N 80.52500°E |
| சுழலிகள் | 2 × 25 MW |
| நிறுவப்பட்ட திறன் | 50 MW |
நீர்த்தேக்கமும் மின் நிலையமும்
காசல்ரே அணை காசல்ரே நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இந்த நீர்த்தேக்கம் கெகல்காமு ஓயாவிலிருந்து வரும் நீரின் மூலம் முழுமையாக பராமரிக்கப்படுகிறது. நீர்த்தேக்கத்தில் இருந்து நார்டன் பாலத்திற்கு அருகே அமைந்துள்ள விமலாசுரேந்திர மின் நிலையத்திற்கு நீர் திருப்பி விடப்படுகிறது. அதே இடத்தில் அமைந்துள்ள நார்டன் அணையால் உருவாக்கப்பட்ட நார்டன் நீர்த்தேக்கத்தில் மின் நிலையம் நீரை வெளியேற்றுகிறது.
இந்த மின் நிலையம் இரண்டு 25 மெகாவாற்று அலகுகளை கொண்டுள்ளது. பெறப்படும் கொள்ளளவு 50 மெகாவாற்று ஆகும். இரண்டு பிரிவுகளும் சனவரி 1965 இல் தொடங்கப்பட்டன.[2]
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை மின்சார சபை". Archived from the original on 2014-01-18. Retrieved 22 செப்டம்பர் 2019.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "CEB Genaration details Laxapana Complex". 16 சனவரி 2014. Archived from the original on 2014-01-16. Retrieved 22 செப்டம்பர் 2019.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)
