காக்டெயில் (2010 திரைப்படம்)
காக்டெயில் | |
---|---|
இயக்கம் | அருண்குமார் அரவிந்த் |
தயாரிப்பு | மிலன் ஜலீல் |
இசை | இரத்தீசு வேகா அல்போன்சு யோசப் |
நடிப்பு | ஜெயசூர்யா அனூப் மேனன் சம்விருதா சுனில் பகத் பாசில் அபர்ணா நாயர் இன்னொசென்ட் மாமுக்கோயா |
ஒளிப்பதிவு | பிரதீப் நாயர் |
படத்தொகுப்பு | அருண் குமார் |
கலையகம் | காலக்ஸி பிலிம்ஸ் |
வெளியீடு | 22 அக்டோபர் 2010 |
ஓட்டம் | 111 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
காக்டெய்ல் (Cocktail) என்பது 2010இல் மலையாள மொழியில் வெளிவந்த பரபரப்பூட்டும் திரைப்படமாகும். அருண்குமார் அரவிந்த் இயக்குனர் பொறுப்பையும், படத் தொகுப்பையும் மேற்கொண்டிருந்தார். இப்படத்தில் ஜெயசூர்யா, அனூப் மேனன், மற்றும் சம்விருதா சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த்ரிந்தனர். பகத் பாசில், அபர்ண நாயர், இன்னொசென்ட், மற்றும் மாமுக்கோயா ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். படம் 22 அக்டோபர் 2010 அன்று வெளியிடப்பட்டது.
இந்த படத்தின் கதையை அனூப் மேனன் இணைந்து எழுதியிருந்தார். இது பட்டர்ஃபிளை ஆன் எ வீல் என்ற கனடா திரைப்படத்தின் மறு பதிப்பாகும். [1] [2] திரைப்படத் தொகுப்பாளர் அருண்குமார் இயக்கியிருந்தார்.
நடிகர்கள்
- வெங்கடேசாக ஜெயசூர்யா
- இரவி ஆபிரகாமாக அனூப் மேனன்
- இரவியின் மனைவியான பார்வதியாக சம்விருதா சுனில்
- இரவியின் முதலாளியான நவீன் கிருட்டிணமூர்த்தியாக பகத் பாசில்
- தேவியாக அபர்ண நாயர்
- கல்யாண் கிருட்டிணனாக இன்னொசென்ட்
- அக்கீம் சேத்தாக மாமுக்கோயா
- எல்சா என்ற விபச்சாரியாக கனி குஸ்ருதி
- டாக்டராக இலீனா
- இரவியின் சகாவாக ஆனந்தாக ஜோஜு ஜார்ஜ்
- இரவியின் மகளாக எஸ்தர் அனில்
- பாடகராக ஜனார்த்தன் ஆத்ரி
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம்
காக்டெய்ல் ஆரம்ப வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், படம் வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு நல்ல வசூல் எடுக்கப்பட்டது. ஒரு பகுப்பாய்வில், சிஃபி படம் நன்றாக இல்லை என்று கூறியது. [3] இருப்பினும், வெளியான சில நாட்களுக்குப் பிறகு எக்ஸ்பிரஸ் பஸ்.காமில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, இந்த படம் ஒரு "அமைதியான வெற்றி" என்று கூறியுள்ளது. [4]
ஒலிப்பதிவு
படத்தின் இசையமைப்பை அல்போன்சு யோசப் என்பவரும் இரத்தீசு வேகா என்பவரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர். படத்திலிடம்பெற்ற ஏழு பாடல்களை அனில் பனச்சூரன் என்பவரும், சந்தோசு வர்மாவும் எழுதினர். [5]
குறிப்புகள்
- ↑ Rediff review
- ↑ Sify review
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110101150834/http://www.sify.com/movies/top-10-malayalam-actors-of-2010-imagegallery-malayalam-km4lKwadegb.html#galname.
- ↑ Parvathy S Nair (18 November 2010). "Cocktail, a dream run at the box office"[தொடர்பிழந்த இணைப்பு]. Expressbuzz.com. Retrieved 7 January 2011.
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 23 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110723213028/http://musikmelody.net/index.php/category/malayalam-music/page/2/.