கஸ்புர்ரான் அன் கல்பில் ஜான் (சிற்றிதழ்)
Jump to navigation
Jump to search
கஸ்புர்ரான் அன் கல்பில் ஜான் இலங்கை கொழும்பிலிருந்து 1889ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.
ஆசிரியர்
- சையது முகம்மது உசேன்.
இவர் காயல்பட்டணத்தை சேர்ந்தவர்.
பொருள்
கஸ்புர்ரான் அன் கல்பில் ஜான் என்றால் சந்தேகநிவர்த்தி என பொருள்படும்.
சிறப்பு
இவ்விதழ் ஓர் அரபுத் தமிழ் இதழாக வெளிவந்துள்ளது. கையெழுத்தில் எழுதி, கல்லச்சில் பதிக்கப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
19ம் நூற்றாண்டு சூழ்நிலைக்கமைய இதன் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக கஸீதாக்கள் எனப்படும் பாக்கள், இசுலாமிய அறிஞர்கள் பற்றி புகழ்பாடும் பாக்கள் இசுலாமிய கொள்கை விளக்க ஆக்கங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.
ஆதாரம்
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்