கவிகுஞ்சர பாரதியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கவிகுஞ்சர பாரதியார்
கவிகுஞ்சர பாரதியார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கவிகுஞ்சர பாரதியார்
பிறப்புபெயர் கோடீசுவரன்
பிறந்ததிகதி 1810
இறப்பு 1896
அறியப்படுவது கருநாடக இசை
க்கலைஞர்


கவிகுஞ்சர பாரதியார் (1810 - 1896) ஒரு கருநாடக இசைக்கலைஞர் ஆவார்.இவரது இயற்பெயர் கோடீசுவரன்.’கவிகுஞ்சரம்’ என்ற பட்டம் சிவகங்கை மன்னரால் இவரது இயலிசைத் திறனுக்காக வழங்கப்பட்டது[1]

வாழ்க்கைக் குறிப்பு

இவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பெருங்கரை என்னும் ஊரில் சுப்பிரமணியபாரதி என்பவருக்குப் பிறந்தார். இளமையிலேயே தமிழிலும், சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றார். தம் உறவினரான மதுரகவி பாரதியிடம் இளமையிலேயே இசை பயின்று பதங்கள், கீர்த்தனைகள் பாடுவதில் திறமை பெற்றார்.

இவரது 18 வது வயதில் கடும் நோய் கண்டு அல்லலுற்றபோது தமது கிராம தேவதை மீது பள் ஒன்று பாடி முடித்து சுகம் பெற்றார் என்று கூறப்படுகிறது. அதன்பின் பல நூல்களை இயற்றினார்.

1865 இல் முத்துராமலிங்க சேதுபதியின் சகோதரர் பொன்னுசாமித் தேவர் வேண்டுகோளுக்கு இணங்க கந்த புராணத்தை கீர்த்தனை வடிவில் பாடினார்.

அழகர் குறவஞ்சி

திருமாலிருஞ் சோலைமலை அழகர் மீது இவர் பாடிய அழகர் குறவஞ்சி, நாடகத் தமிழின் வகையைச் சேர்ந்தது. இந்நாட்டிய நாடகத்தை இவர் சிவகெங்கை ஜமீந்தாரிணியாக இருந்த காந்தமநாச்சியார் முன்னிலையிலும் பல அறிஞர்கள் முன்னிலையிலும் அரங்கேற்றி, பல்லக்கு வரிசை முதலிய பெருஞ்சிறப்புக்களைப் பெற்றார்.

கவிகுஞ்சரம் பட்டம்

இவரது பாடல்களின் சிறப்பைக் கேள்வியுற்ற சிவகெங்கை கௌரிவல்லப மகாராஜா இவருக்கு கவிகுஞ்சரம் என்ற பட்டத்தையும் அளித்துத் தமது ஆஸ்தான வித்துவான்களில் ஒருவராகவும் ஆக்கிக் கொண்டார்.

எழுதிய நூல்கள்

  • குறவஞ்சி
  • கந்தபுராணக் கீர்த்தனைகள்
  • மதுரை மீனாட்சி அம்மன் மீது அடைக்கலமாலை
  • மதுரை மீனாட்சி அம்மன் மீது கயற்கணிமாலை
  • திருமுக விலாசம்
  • திருப்பதி வேங்கடாசலபாதி மீது திருவேங்கடமாலை
  • பேரின்பக் கீர்த்தனைகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கவிகுஞ்சர_பாரதியார்&oldid=7280" இருந்து மீள்விக்கப்பட்டது