கழுவுதல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

நீரினால் கை, முகம் போன்ற உடல் பகுதிகளை கழுவுதல் மனிதர் அன்றாட செய்யும் செயற்பாடுகளில் ஒன்று.

முகம் கழுவுதல்

காலை எழுந்தவுடன் முகம் கழுவுதலை பலர் பழக்கத்தில் கொண்டுள்ளார்கள்.

கை கழுவுதல்

கழிவு அகற்றிய பின்பு கைகளை அலசிக் கழுவுதல் முக்கியமாகும். இது நோய்கள் பரவுதலை தடுக்கின்றது. உணவு உண்ணும் முன்பும் கைகளை கழுவுதல் அவசியம்.

கால் கழுவுதல்

கோயிலுக்குள் புகும் முன்பு கால்களை கழுவுதல் இந்து மதக் கோயில்களில் பரிந்துரைக்கப்படுகின்றது. உறங்கச் செல்வதற்கு முன் கால்களைக் கழுவுதலை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

"https://tamilar.wiki/w/index.php?title=கழுவுதல்&oldid=319855" இலிருந்து மீள்விக்கப்பட்டது