கழங்கு (வேலன் விளையாட்டு)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கழங்கு என்னும் குறிவிளையாட்டு தொன்றுதொட்டு ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று.

குறி சொல்லும் வேலன் கழங்கை வைத்துக் குறி சொன்னதாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1]

தலைவன் நினைவால் மனம் மொழி செயல்களில் மாறுபட்டுக் காணப்படுவது இயல்பு.
இது செவிலிக்குத் தெரியாதபோது குறி பார்ப்பாள்.
வேலன் குறி சொல்லுவான்.
அப்போது அவன் இரண்டு வழிகளைக் கையாளுவான்.

ஓலைக்கட்டில் நூல் செருகச் சொல்லிக் குறி சொல்லுவான். இது ஒரு வகை.

கழங்குக் காய்களை இரண்டு இடங்களில் மாறிமாறிப் போடுவான்.
அடையாளமிட்ட பொற்கழங்கு எந்தப் பக்கம் விழுகிறது என்று பார்த்துக் குறி சொல்லுவான்.
மூன்று இடங்களிலும், நான்கு இடங்களிலும் போட்டு எதில் பொற்கழங்கு விழுகிறது எனப் பார்த்தும் குறி சொல்லுவான்.
இதில் கழங்குக்காய் எந்தப்பக்கம் கட்டுகிறது எனப் பார்க்கப்படும்.

குறி என்பது உண்மையில் ஒரு விளையாட்டு. எதிர்காலத்தில் நிகழப்போவதை அதனால் கணிக்கமுடியாது. ஏதோ ஒரு மன நிம்மதிக்காக விளையாடப்படும் விளையாட்டு.

இவற்றையும் பார்க்க

சங்ககால விளையாட்டுகள்

அடிக்குறிப்பு

  1.  
    கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
    ஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும் - தொல்காப்பியம் - களவியல் (செவிலி கூற்று)