கள்ளிக்குடிப் பூதம் புல்லனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 333 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.

பாலைத்திணை

பாடல் தரும் செய்தி

தலைவன் பொருள் தேடிவரச் சென்றுள்ளான். தலைவி அவனை தினைத்துக் கவலைப்படுகிறாள். வீட்டிலே பல்லி படுகிறது(ஒலிக்கிறது).

(பல்லி தன் துணையை அழைக்க ஒலிக்கும். அது தன் துணையை நினைப்பது போல வேண்டிய ஒருவர் தன்னை நினைப்பதாக மக்கள் அந்த ஒலியை எடுத்துக்கொளவது வழக்கம்)

தோழி தலைவியைத் தேற்றுகிறாள். நீ அவரை நினைக்கிறாய். அவர் உன்னை நினைக்கிறார். அதனால் பல்லி படுகிறது. நீ நின் அவலம் நீங்குக - என்கிறாள்.