கல்யாணம் ரகுராமையா
கல்யாணம் ரகுராமையா | |
---|---|
பிறப்பு | கல்யாணம் வெங்கட ரகுராமையா 5 மார்சச்1901 சுத்தப்பள்ளி கிராமம், குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 24 பெப்ரவரி 1975 ஐதராபாத்து, இந்தியா | (அகவை 73)
பணி | நடிகர் |
வாழ்க்கைத் துணை | சாவித்திரி |
பிள்ளைகள் | தோட்டா சத்யவதி (மகள்) |
விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது 1973 பத்மசிறீ 1975 |
ஈலாபாட்ட ரகுராமையா (Eelapata Raghuramaiah) என்று பிரபலமாக அறியப்பட்ட கல்யாணம் ரகுராமையா (Kalyanam Raghuramaiah) (1901–1975), ஓர் இந்திய நடிகராவார். இவர் தெலுங்குத் திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு நாடகங்களில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்டவர். சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் பத்மசிறீ விருது பெற்ற இவர், கிருட்டிணன் அல்லது துசுயந்தன், பவானிசங்கர், நாரதர் போன்ற புராணப் பாத்திரங்களுக்காக அறியப்பட்டவர். இவர் பல்வேறு இராகங்களை அடிப்படையாகக் கொண்ட விரிவான ராக ஆலாபனையில் ஈடுபட்டார்.[1][2][3]
சிறந்த நடிகர்களில் ஒருவரான இவர், தனது விரலை வாயில் வைத்து, விசில் அல்லது புல்லாங்குழல் ஒலியை உருவாக்குவதன் மூலம் (தெலுங்கில் ஈலா என்று பொருள்) பாத்யங்களையும் பாடல்களையும் பாடும் திறனைக் கொண்டிருந்தார். இவர் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். 20,000 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.[4] இரவீந்திரநாத் தாகூர் இவரை "மேடையின் நைட்டிங்கேல்" என்று அழைத்தார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை
கல்யாணம் ரகுராமையா குண்டூர் மாவட்டத்தின் சுத்தப்பள்ளி கிராமத்தில் ஒரு காப்பு குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு வெங்கட சுப்பையா என்று பெயரிடப்பட்டது.[5] சிறுவயது நாட்களில் ரகுராமையா என்ற வேடத்தில் நடித்ததில் இவர் பிரபலமாக இருந்தார். எனவே இந்திய அரசியல்வாதியான காசிநாதுனி நாகேசுவரர ராவ் என்பவரால் ரகுராமையா என்று பெயரிடப்பட்டார்.[2][3][6]
ஆரம்பகால தொழில்
1933 ஆம் ஆண்டில் "பிருத்வி புத்ர" என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார். இது தெலுங்கில் வெளியான ஐந்தாவது பேசும்படமாகும் . ஸ்ரீ கிருஷ்ண ராயபரம் (1960) மற்றும் சிந்தாமணி உள்ளிட்ட பல படங்களில் கிருட்டிணராக நடித்தார்.[2][3]
சொந்த வாழ்க்கை
இரகுராமையா 1938இல் சாவித்திரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு சத்யவதி என்ற ஒரு மகள் இருக்கிறார்.[2][3]
இறப்பு
இரகுராமையா தனது 75வது வயதில் 1975இல் மாரடைப்பால் இறந்தார். ரவீந்திரநாத் தாகூர் இவரது பிறந்த இடமான சுத்தப்பள்ளி கிராமத்தில் இவரது நினைவாக 14 பிப்ரவரி 2014 அன்று இவரது மூத்த சகோதரரின் மகன் கல்யாணம் நரசிம்ம ராவ் என்பவரால் ஒரு வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Article in Eenadu "Eenadu - the Heart and Soul of AndhraPradesh". Archived from the original on 11 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "He was ahead of his times - Tirupati". The Hindu. 10 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "pranaism: తెలుగు నాటకరంగ ప్రముఖుల ఫోటోలు (సశేషం)". Pranaism.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
- ↑ 20th Century Telugu Luminaries, Potti Sriramulu Telugu University, Hyderabad, 2005
- ↑ M. L. Kantha Rao (July 1999), A Study of the Socio-Political Mobility of the Kapu Caste in Modern Andhra. University of Hyderabad. Chapter 6. p. 274. hdl:10603/25437
- ↑ "Telugu Cinema Prapamcham: Daksha Yagnam (1962)". Telugucineblitz.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.