கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயம்
கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் | |
---|---|
அமைவிடம் | |
கல்முனை இலங்கை | |
தகவல் | |
குறிக்கோள் | கல்வியே உயர்வு, ஒழுக்கமே உயிர்,பொறுமையே தர்மம் |
தொடக்கம் | 1936 |
நிறுவனர் | சுவாமி விபுலானந்தர் |
அதிபர் | திரு சி. புவிராஜா |
தரங்கள் | வகுப்புகள் 1 - 13 |
பால் | இரு பாலார் |
கல்முனை இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனைப் பகுதியிலுள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகும்.
வரலாறு
கல்முனையில் இந்து சமயச் சூழலில் கற்பதற்கான படசலை இல்லை என்ற குறையைப் போக்க இந்து வாலிபர் சங்கத்தின் முயற்சியுடனும் சுவாமி விபுலானந்தரின் வழிகாட்டலுடனும் 1936.01.31ந் திகதி ஐம்பதுக்கும் குறைவான பிள்ளைகளுடனும் ஒரு ஆசிரியருடனும் கல்விச்சாலை ஒன்று ஆரம்பிகப்பட்டு நடாத்தப்பட்டது. இப்பாடசாலை அதே ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 98 மாணவர்களுடனும் மூன்று ஆசிரியர்களுடனும் இராமகிருஷ்ண வித்தியாலயம் என்ற பெயருடன் அரச அங்கீகாரம் பெற்றது. பாடசாலையின் நிருவாகத்தை இராமகிருஷ்ண மிஷன் பொறுப்பேற்று நடாத்தியது.
1941 இல் ஆரம்பப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. 1945இல் முதுநிலை விடுகை வகுப்பு வரை உயர்ந்துபன்னிரண்டு ஆசிரியர்களுடனும் 375 மாணவர்களுடனும் காணப்பட்டது. 1991இல் க.பொ.த உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
பாடசாலைப் பண்
- வாழ்க எமது பாடசாலை வாழ்கவே-கல்முனை
- இராமகிருஷ்ண மகாவித்தியாலயம் வளர்கவே
- வளமும் பெருக நெறிகள் உயர - வாழ்க
- எமது பாடசாலை வளர்கவே.
- ஆற்றல் அன்பு அறிவு பெருக
- ஆத்ம சக்தி எங்கும் நிறைய
- எமது பணிகள் இனிது தொடர
- எங்கும் கல்வி இலங்கி வளர
- வாழ்க எமது பாடசாலை வளர்கவே.
- சிறக்க அறமும் அடிகள் வழியும்
- சீராய்க் கலைகள் பல்க எங்கும்
- களனி நிறையக் கல்முனை ஊரில்
- கல்வி வழங்கும் கற்பக தருவாய்
- வாழ்க எமது பாடசாலை வளர்கவே.
- வித்தைகள் பல பொலிந்து விளங்க
- வீரம், வெற்றி, ஒழுக்கம் ஓங்க
- முத்தமிழ் ஆற்றல் மிகுந்து சிறக்க
- நித்திலமெங்கும் நிலைத்து ஒளிர
- வாழ்க எமது பாடசாலை வளர்கவே.
- வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!
பாடசாலையில் பணியாற்றிய அதிபர்களும் சேவைக்காலமும்
அதிபரின் பெயர் | சேவைக்காலம் |
---|---|
திரு.வேலுப்பிள்ளை உடையார் | 1936-1957 |
திரு.கண்டுமணி | 1957-1962 |
திரு.க.கணபதிப்பிள்ளை | 1962-1968 |
திரு.சிவநாதபிள்ளை | 1968-1969 |
திரு.சீ. துரைரெத்தினம் | 1969-1971 |
திரு.செல்லத்துரை | 1971-1973 |
திரு.சீ. துரைரெத்தினம் | 1973-1974 |
திரு.இராசதுரை | 1974-1974 |
திரு.மு.சிவநாதபிள்ளை | 1974-1980 |
சீ. துரைரெத்தினம் | 1980-1981 |
திரு.வீ.விசுவாசம் | 1981-1984 |
திருமதி.சி.விஜயரெத்தினம் | 1984-1993 |
திரு.ந.நாகராசா | 1993-2006 |
திருமதி.அ. பேரின்பராசா | 2006-2012 |
திரு.சி. புவிராசா[1] | 2013- |
ஆதாரம்
கமு/கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயம் பவளவிழா சிறப்பிதழ்-2011