கல்பனா பண்டித்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கல்பனா பண்டித்
KalpanaPandit.jpg
2012 இல் கல்பனா பண்டித்
பிறப்புகல்பனா பண்டித்
ஜனவரி 20 1967
பணிநடிகை, மருத்துவர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்போது வரை
வடிவழகுவியல் தகவல்
உயரம்5 அடி 9 அங் (1.75 m)
முடியின் நிறம்கருப்பு
கண் நிறம்பழுப்பு நிறம்
வலைத்தளம்
www.kalpanapandit.com

கல்பனா பண்டித் (Kalpana Pandit) என்பவர் இந்தியத் திரைப்படநடிகை , அவசர மருத்துவத்துறையில் பணிபுரியும் மருத்துவர் ஆவார். ஹவுஸ் ஆஃப் பண்டித் (பண்டித்தின் இல்லம்) எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். பாலிவுட் மற்றும் கன்னட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். 2008 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெற்ற ஜீ சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அழகுப் போட்டியின் நடுவராக இருந்தார். இந்த அழகுப் போட்டியானது அரிசோனாவில் உள்ள டூசான் எனும் நகரில் ஆகஸ்டு 29, 2012 அன்று நடைபெற்றது. நவம்பர், 2013 இல் குவாங்சௌ, சீனாவில் நடைபெற்ற உலக அழகி 2013 இல் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை

கல்பனா பண்டித் சனவரி 20, 1967 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஆயுர்வேத வித்வான் என அழைக்கப்படும் ஸ்ரீ. பி. வி. பண்டித் எனும் ஆயுர்வேத மருத்துவரின் பெயர்த்தி ஆவார். இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல் பயின்ற பிறகு அமெரிக்காவில் எம்.டி பட்டம் பெற்றார். பின் அமெரிக்காவில் அவசர மருத்துவராகப் பணிபுரிந்தார்.[2]

இவர் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக வீல் சலவைத்தூள், மைசூர் சாண்டல் டால்க், நைல் போன்ற விளம்பரங்களில் தோன்றியுள்ளார். 2000 ஆம் ஆண்டில் கஜா காமினி எனும் பாலிவுட்திரைப்படத்தில் அறிமுகமானார். இதனை எம். எஃப். உசேன் என்பவர் இயக்கினார்.[3]

தொழில் வாழ்க்கை

தமிழ்த் திரைப்படம்

கல்பனா பண்டித் பனித்துளி எனும் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தத் திரைப்படமானது ஆகஸ்டு 10, 2012 இல் இந்தியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியிடப்பட்டது. இதில் கணேஷ் வெங்கட்ராமனுடன் இணைந்து நடித்திருந்தார். இதன் பெரும்பாலான காட்சிகள் கலிபோர்னியா, சென்னை, இந்தியா போன்ற நகரங்களில் படமாக்கப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற காட்சிகளுக்கு சி. ஜே. ரவிக்குமார் என்பவரும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெற்ற காட்சிகளுக்கு கிறிஸ் எல்ரிட்ஜ் என்பவரும் ஒளிப்பதிவு செய்தனர். நட்டி குமார் என்பவர் இந்தத் திரைப்படத்தை இயக்கினார். இதனை ட்ரீம்ஸ் ஆன் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹவுஸ் ஆஃப் பண்டித் நிறுவனம் தயாரித்தது.[4]

2000 - 2002

கஜா கஜினி (2000), மோக்‌ஷா (2001), பிதா (2002) ஆகிய இந்திப் படங்களில்நடித்தார்.

2003

பிரான் ஜாயே பர் ஷான் னா ஜாயே எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இது மலையாளப் படமான வியட்நாம் காலனி எனும் திரைப்படத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது ஆகும்.[5] மேலும் இதே ஆண்டில் அசோக் ஹோன்டா இயக்கத்தில் ஓம் எனும் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கத்தில் பியார் கியா நஹின் ஜாதா எனும் திரைப்படத்தில் அஞ்சு எனும் கதாப்பத்திரத்தில் நடித்தார்.

விருதுகள்

2011 ஆம் ஆண்டில் பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய குறும்படத் திருவிழாவில் சிறந்த கன்னட நடிகைக்கான விருதினைப் பெற்றார் [6]. 2010 ஆம் ஆண்டில் ஜோ ஜோ லாலி எனும் படத்திற்காக இவ்விருதைப் பெற்றார். 2013 இல் மும்பையில் நடைபெற்ற சிவ ராஜ்முத்ர சத்ரபதி சிவாஜி விருது விழாவில் சிறந்த நடிகை மற்றும் தற்சார்புடைய புதிய தயாரிப்பாளருக்கான விருதினைப் பெற்றார். ஜன்லேவா 555 எனும் படத்திற்காக இதனைப் பெற்றார். 2016 இல் நடைபெற்ற உலக தியேட்டர் திருவிழாவில் சுலிக் சிக்கிடாகா " நீரினைப் போன்ற இயல்பு கொண்டிரு "எனும் படைப்பிற்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

சான்றுகள்

  1. "Kalpana: Actress, House of Pandit owner - Indian Ad Divas". indianaddivas.com.
  2. "Physician Kalpana Pandit Makes Debut in Bollywood". Indiawest. 2012-09-14. Archived from the original on 2013-06-05. பார்க்கப்பட்ட நாள் 2012-11-04.
  3. "Kalpana Pandit - Kalpana Pandit Biography". Koimoi.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-04.
  4. "The Official Kalpana Pandit Site | The Official Kalpana Pandit Site", www.kalpanapandit.com (in English), archived from the original on 2018-04-02, பார்க்கப்பட்ட நாள் 2018-04-09
  5. Jha, Sanjay (2003-05-02), Pran Jaaye Par Shaan Na Jaaye, Raveena Tandon, Namrata Shirodkar, Rinke Khanna, பார்க்கப்பட்ட நாள் 2018-04-09
  6. "Kalpana Pandit to judge Miss India International 2012". Bangalore Live News. 2012-05-06. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-11-04.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கல்பனா_பண்டித்&oldid=22518" இருந்து மீள்விக்கப்பட்டது