கலா ராம்நாத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கலா ராம்நாத்
கலா ராம்நாத்.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்புமே 9
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)வயலின் கலைஞர்
இசைக்கருவி(கள்)வயலின்
இணையதளம்kalaramnath.com

கலா ராம்நாத் (Kala Ramnath) இவர் ஓர் இந்தியவைச் சேர்ந்த பாரம்பரிய வயலின் கலைஞர் ஆவார் . இவர் மேவதி கரனாவைச் சேர்ந்தவர் ஆவார் [1] இவருக்கு 2016 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி புரஸ்காரம், 2008 ல் இராட்டிரிய குமார கந்தர்வ சம்மன் மற்றும் 1999 இல் பண்டிட் ஜஸ்ராஜ் கௌரவ் புரஸ்காரம் போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. [2]

ஆரம்ப கால வாழ்க்கை

இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னையில் மாலதி மற்றும் டி. என் மணி என்பவர்களுக்கு முதல் குழந்தையாக கலா ராம்நாத் பிறந்தார். கலா ராம்நாத் வயலின் கலைஞர்களான டி. என். கிருஷ்ணன் மற்றும் என்.ராஜம் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை, டி. என். மணி இந்திய திரைப்பட இசையில் தனது பங்களிப்புகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார்.

இரண்டரை வயதில், கலா ராம்நாத் வயலின் மற்றும் குரல் பயிற்சிக்கு தனது தாத்தா நாராயணய ஐயரிடம் பயிற்சி பெறத் தொடங்கினார். இவர் தனது குடும்பத்தில் ஏழாவது தலைமுறை வயலின் கலைஞர்களின் தொடக்கத்தைக் குறிக்கிறார். இவரது தாத்தா இனிப்புகள் மற்றும் மிட்டாய்களை வழங்குவதன் மூலம் பயிற்சிக்கு ஊக்கம் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இவர் 14 வயதிலிருந்தே தனது அத்தையின் இசை நிகழ்ச்சியில் உடன் பங்கேற்றார். பதினைந்து ஆண்டுகளாக இவர் மேவதி பாடகர் பண்டிட் ஜஸ்ராஜுவிடம் கற்றுக் கொண்டார்.

நிகழ்த்தும் தொழில்

சிட்னி ஓபரா ஹவுஸ், லண்டனின் ராணி எலிசபெத் ஹால் மற்றும் நியூயார்க்கின் கார்னகி ஹால் உள்ளிட்ட சில முக்கிய இசை விழாக்களிலும், உலகெங்கிலும் உள்ள மிகவும் மதிப்புமிக்க அரங்குகளிலும் கலா ராம்நாத் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மேற்கத்திய பாரம்பரியம், ஜாஸ், ஃபிளமெங்கோ மற்றும் பாரம்பரிய ஆப்பிரிக்க இசையின் கூறுகளை உள்ளடக்கிய உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்களுடன் இவர் இசை கூட்டணிகளை உருவாக்கியுள்ளார்.

கலா ராம்நாத் லண்டன் சிம்பொனி மற்றும் லண்டன் பில்ஹார்மோனிக் போன்ற இசைக்குழுக்களில் பணிபுரியவும் பரிசோதனை செய்யவும் விரும்பும் கலைஞர் ஆவார். கை எகார்ட், எட்கர் மேயர், பெலா ஃப்ளெக், டெர்ரி போஸியோ, அப்போஸ் கோசிமோவ், அயர்டோ மோரேரா, ஜியோவானி ஹிடல்கோ மற்றும் ராக் லெஜண்ட் ரே மன்சாரெக் உள்ளிட்ட கலைஞர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார். 'ராகா ஆப்பிரிக்கா', 'குளோபல் கான்வெர்சேசன்' மற்றும் சமீபத்தில் 'எலமென்ட்ஸ்' அனைத்தும் கலா ராம்நாத் தனது சக உலக இசைக் கலைஞர்களுடன் இணைந்து நிறுவிய இசைக்குழுக்கள் ஆகும்.

ஹாலிவுட் படங்களின் பின்னணி இசைகளிலும் கலா ராம்நாத் ஈடுபட்டுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட் மற்றும் ஜார்ஜ் அகோக்னி போன்ற இசையமைப்பாளர்களுடன் பிளட் டயமண்ட் என்றத் திரப்படத்தில் பணியாற்றியது ஆகும்.

கற்பித்தல் தொழில்

கலா ராம்நாத் தொடர்ந்து உலகம் முழுவதும் விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துகிறார். நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் கன்சர்வேட்டரி ஆஃப் மியூசிக், ஜெர்மனியில் கீசென் பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க்கில் உள்ள கார்னகி ஹால் உடன் இணைந்து வெயில் நிறுவனம் போன்ற குறிப்பிடத் தகுந்த சில இடங்கள். இவர் தனது அடித்தளமான 'கலாசிறீ' வடிவத்தில் இசை மூலம் குறைந்த சலுகை பெற்ற மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை வளப்படுத்த ஆர்வமாக உள்ளார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

காலா ராம்நாத்தின் இசையமைப்பு கிராமி விருது பெற்ற இசைத்தொகுப்பான "இன் 27 பீஸ்" என்ற இசைத்தொகுப்பில் இடம்பெற்றது. கிராமி பரிந்துரைக்கப்பட்ட இசைத்தொகுப்பான 'மைல்ஸ் ஃப்ரம் இந்தியாவில்' ஒரு சிறப்பு கலைஞராகப் பணியாற்றினார். மதிப்புமிக்க 'சாங்லைன்ஸ்' என்ற இதழ் உலகின் ஐம்பது சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவராக அங்கீகரித்தது.

குறிப்புகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-02-03. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
  2. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990122/02251785.html

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கலா_ராம்நாத்&oldid=9540" இருந்து மீள்விக்கப்பட்டது