கலாநிதி நாராயணன்
கலாநிதி நாராயணன் | |
---|---|
பிறப்பு | கலாநிதி கணபதி 7 திசம்பர் 1928 தமிழ்நாடு,பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 21 பெப்ரவரி 2016 சென்னை , இந்தியா | (அகவை 87)
பணி | இந்திய பாரம்பரிய நடனம், நடன ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1940-1944; 1973-2016 |
கலாநிதி நாராயணன் (Kalanidhi Narayanan) 1928 டிசம்பர் 7 முதல் – 2016 பிப்ரவரி 21) இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடன ஆசிரியரும் ஆவார். இவர் தேவதாசி குடும்பத்தில் பிறக்காமல் ஆனால் தேவதாசி முறை நடன வடிவத்தை கற்றுக் கொண்டு அதனை 1930 முதல் 1940 வரையிலான காலகட்டங்களில் அதனை மேடைகளில் நிகழ்த்தியவர் ஆவார். 1940 களில் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு அவர் 1973 இல் நடனமாடத் திரும்பி, அபிநயத்தில் குறிப்பிடத்தக்க ஆசிரியராகப் புகழ்பெற்றார்..[1][2]
இவருக்கு 1985 இல் இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த குடிமகன்களுக்கு வழங்கப்படும் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது,[3] 1990 இல் சங்கீத நாடக அகாதமியின் பரதநாட்டியத்திற்கான சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப் பட்டது,[4] 1998 இல் இசை மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதமியின் காளிதாஸ் சம்மன் விருதும், 2011இல் நடனத்திற்காக வழங்கப்படும் சங்கீத நாடக அகாதமி தாகூர் ரதனா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
இளமை வாழ்க்கை
கலாநிதி கணபதி என்ற பெயருடன் சுமித்ரா மற்றும் கணபதி ஆகியோருக்கு ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்தார், அவரது தாயார் இவருக்கு தனது நடனக் கல்வியைப் அளிப்பதில் ஆர்வமாக இருந்தார், இது அவரது தந்தையாலும் ஆதரிக்கப்பட்டது. ஏழு வயதிலேயே அவர் பல்வேறு குருக்கள் மூலம் தீவிரமாக பயிற்சி பெற்றார், இதில் வீனா தனம் என்பாரின் மகள் காமாட்சி அம்மாளிடம் "பத்மம்" மற்றும் "ஜவாலி" ஆகியவற்றையும் மற்றும் மனக்கால் சிவராஜன் என்பவரிடம் குரல் பாடங்களையும் கற்றார். காஞ்சிபுரத்தில் இருந்த குறிப்பிடத்தக்க குருவான கன்னப்பா பிள்ளை என்பவர் இவருக்கு "நிருத்தா" வகை நடனத்தின் முக்கிய ஆசிரியராக இருந்தார், தஞ்சாவூர் பாலசரஸ்வதி என்பவரும் இவருடைய ஆசிரியர் ஆவார். சின்னையா நாயுடு மற்றும் மயிலாப்பூர் கௌரி அம்மாளிடம் அபிநயம் கற்றார். இது பிற்காலத்தில் நாட்டியத்தில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்க உதவியது. தனது 12 வயதில் மியூசிக் அகாதெமிக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் ஹவுஸில் அரங்கேற்றம் செய்தார்.[5] 2016 பிப்ரவரியில் இறந்தார்.[6]
குறிப்புகள்
- ↑ "Padmabhushan Kalanidhi Narayanan Talks To Lokvani". Lokvani. 2 February 2003.
- ↑ "Exploration of expressions". The Hindu. 25 January 2008. Archived from the original on 29 ஜனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013.
- ↑ "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதமி Official website. Archived from the original on 17 February 2012.
- ↑ O'Shea, p. 175
- ↑ http://timesofindia.indiatimes.com/city/chennai/Bharatanatyam-exponent-Kalanidhi-Narayanan-dies-aged-87/articleshow/51088402.cms
- Janet O'Shea (2007). "Revival Era Dancers at Music Academy". At Home in the World: Bharata Natyam on the global stage. Wesleyan University Press. p. 1975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8195-6837-6.