கரையெல்லாம் செண்பகப்பூ (புதினம்)
கரையெல்லாம் செண்பகப்பூ | |
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம்[1], விசா பப்ளிகேஷன்ஸ்[2] |
ISBN | 978-81-8493-619-3 |
கரையெல்லாம் செண்பகப்பூ, சுஜாதா எழுத, எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் அது முழு நூல்வடிவில் கிழக்குப் பதிப்பகம் மற்றும் விசா பப்ளிகேஷன்ஸாரால் பதிப்பிக்கப்பட்டது.
கதைக் கரு
நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய மேம்பட்டி என்னும் கிராமத்திற்கு வரும் இளைஞன், ஜமீனின் பாழடைந்த வீட்டில் தங்குகிறார். அங்கே யாரோ மர்மமாக நடமாடுகிறார்கள். அவர்கள் எதையோ தேடுவது போலத் தெரிகிறது. அதே வீட்டில் வந்து தங்கும் ஜமீன் வாரிசு எனப்படும் பெண் கொலையுண்டு இறக்கிறாள். கொலைக்குக் காரணம் என்ன, அந்த வீட்டின் மர்மம் என்ன என்பதைச் செல்லும் கதை.
கதை மாந்தர்கள்
- கல்யாணராமன்
- வெள்ளி
- மருதமுத்து
- தங்கராசு
- சினேகலதா
- பெரியாத்தா
- பெரியசாமி
திரைப்படம்
இப்புதினம் 1981 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. [3] சி. சண்முகசுந்தரம், கே. தங்கவேலு தயாரிப்பில், ஜி. என். ரங்கராஜனின் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப்போத்தன், ஸ்ரீபிரியா, சுமலதா, மனோரமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.