கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
Jump to navigation
Jump to search
கருவூர்ப் பூதஞ்சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு பாடல் எண் 50.
பாடல் தரும் செய்தி
தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி தன்னால் அன்றில் போலக் குரல் எழுப்ப முடியவில்லையே. ஊர் வெளிப்படையாக அவதூறு பேசுமே என அங்கலாய்த்து வருந்துகிறாள்.
உயிரினம் - அன்றில்
'எல்லி, மனை சேர் பெண்ணை மடிவாய் அன்றில், துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண்' அன்றில் நெய்தல் நிலத்துப் பறவை. பனைமரத்தில் இரவு வேளையில் தங்கும். ஆணோ பெண்ணோ தன் துணை ஒன்று எது எதைப் பிரிந்தாலும் இடைவிடாது ஓயாமல் குரல் எழுப்பிக்கொண்டே யிருக்கும்.