கருவூர்ப் புராணம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கருவூர்ப் புராணம் கொங்கு நாட்டிலுள்ள பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான கரூர் எனப்படும் கருவூரோடு தொடர்புடையது.

பாடியவர்

கருவூர்ப் புராணத்தை பாடியவரின் பெயர் தெரியவில்லை. தமது குருநாதர் பெயரைச் சத்தியஞானி என்று இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார். [1]

அமைப்பு

கி.பி.1618இல் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்நூலில் 61 சருக்கங்களும், 1131 பாடல்களும் உள்ளன.[1]

சிறப்பு

கருவூர்த் தலச்சிறப்பும், ஆனிலையப்பரை வழிபட்டுக் கதி பெற்ற மேலோர்களையும், முக்கியமாகப் புகழ்ச்சோழர், எறிபத்தர், கருவூர்த் தேவர் முதலியோர்களைப் பற்றியும் இப்புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. கருவூர்த் தேவரின் விரிவான வரலாறு இதுவரை வேறு எந்த நூலிலும் கூறப்பெறவில்லை. இந்தச் சிவயோகி, தமது சித்தி நெறியால் நிகழ்த்திய அற்புதச் செயல்களை இதில் காணலாம். இப்புராணத்தில் மூலமாக கருவூர்ச் சித்தரின் வரலாற்றை அறியலாம். [1]

அரிய ஓவியம்

கருவூர்ப்புராணம் எழுதப்பட்ட காலத்தில் திருப்புடைமருதூர் கோயிலில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. இந்தக் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. அப்புராணத்தில் கூறப்பெறும் கதைகள் அவ்வோவியத்தில் காட்சிகளாய் காட்டப்பட்டுள்ளன. அதில் வன்னிமரம் மீன்மழை பொழியும் காட்சியும், திருப்புடைமருதூர் ஈசனை கருவூர்த் தேவர் வணங்கும் காட்சியும் உள்ளன. [2]

மேற்கோள்கள்

<References>

  1. 1.0 1.1 1.2 வே.இரா.மாதவன், தமிழில் தல புராணங்கள், பாவை வெளியீட்டகம், தஞ்சாவூர்
  2. குடவாயில் பாலசுப்பிரமணியன், கருவூர்த்தேவரின் உருவம் காட்டும் அரிய ஓவியம், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
"https://tamilar.wiki/index.php?title=கருவூர்ப்_புராணம்&oldid=19867" இருந்து மீள்விக்கப்பட்டது