கரடிசித்தர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கரடிசித்தர் என்பவர் கஞ்சமலையில் வாழ்ந்த சித்தராவார். இவர் திருமந்திரம் அருளிய திருமூலரின் சீடராகவும் இருந்துள்ளார். இவரைப் பற்றிய எண்ணற்ற தொன்மங்கள் கூறப்படுகின்றன. இவர் திருமூலர் சமைத்த உணவினை உண்டு சிறுவனாக மாறியதாகவும், ஔவையார் நடத்திவைத்த அங்கவை-சங்கவை திருமணங்களில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சிவபக்தரான இவர் உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோவிலுக்கு தினமும் வந்து சிவபூசை செய்துள்ளார். இவர் நாரதரின் வேண்டுகோளுக்காக, அங்கவை சங்கவை திருமணத்தில் கரடி போல் வந்து அங்கிருந்தவர்களை பயமுறுத்தியதாக கரபுரநாதர் கோயில் தலவரலாறு கூறுகிறது.[1] கரடிசித்தருக்கு இத்தலத்தில் ஒரு தனி சன்னதி உள்ளது.

தொன்மம்

திருமூலர் இளமையாக மாறுவதற்கான உணவினை சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது மூலிகைப் பரிப்பதற்காக கஞ்சமலைக்கு சென்றபோது, கரடிசித்தர் கீழே கிடந்த குச்சையை வைத்துக் கிண்டினார். எதிரிபாராத விதமாக அந்த உணவு கருமைநிறத்திற்கு மாறியது. பதரிய கரடிசித்தர் அந்த உணவினை உண்டார். அதனால் 16 வயதான சிறுவனாக மாறிவிட்டார்.

திரும்பி வந்த திருமூலர் அச்சிறுவனிடம் வினவி அறிந்து கொண்டார். பின்பு கரடிசித்தர் அந்த உணவினை உமில, அதை உண்டு திருமூலர் சிறுவயதினராக ஆனார்.

ஆதாரங்கள்

  1. ஆன்மிகம் இதழ் 1-15 ஜூலை 2016 பக்கம் 74
"https://tamilar.wiki/index.php?title=கரடிசித்தர்&oldid=27963" இருந்து மீள்விக்கப்பட்டது