கன்னன்குடா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கன்னன்குடா இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமம்.
அமைவிடம்
கன்னன்குடா கிராமமானது இலங்கை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு நகரிலிருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு நகரை படுவான்கரை பிரதேசத்துடன் இணைக்கும் வலையிறவுப் பாலத்தினூடாக இக்கிராமத்தினை சென்றடையலாம்.
வாழ்வாதாரம்
கன்னன்குடா கிராமமானது மிகப் பரந்த நெல் வயல்களை கொண்ட பிரதேசமாகும். அகையால் இப்பிரதேச மக்களில் கணிசமானவர்கள் விவசாயத்தினை தமது பிரதான வாழ்வாதரமாகக் கொண்டுள்ளனர். இக்கிராமம் மட்டக்களப்பு வாவிக் கரையில் அமைந்துள்ளதால், மீன்பிடித்தல் கைத்தொழிலும் மேற்கொள்ளப்படுகிறது.
பாடசாலை
படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள மிகப் பிரபலமான பாடசாலை மட்/கன்னன்குடா மகா வித்தியாலயமாகும். இதுவே இப் பிரதேசத்தில் உள்ள க.பொ.த. உயர்தரம் வரை கற்பிக்கப் படும் பாடசாலையாகும்.
ஆலயங்கள்
கன்னன்குடா கண்ணகை அம்மன் ஆலயமானது வரலாற்று சிறப்பு மிக்கது. இங்கு கண்ணகை அம்மனுக்கு ஆண்டு தோறும் வைகாசி மாதம் ஒன்பது(9) நாட்கள் வருடாந்த சடங்கு உற்சவம் நடைபெறும். கண்ணகை அம்மன் கோயிலுக்கு அருகில், பிள்ளையார் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.
கலைகள்
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தமிழர் பாரம்பரியக் கைலையம்சமான நாட்டுக்கூத்துக்கு பெயர்போன இடம் கன்னன்குடாவாகும். இங்கு இடம்பெறும் கண்ணகை அம்மன் சடங்கின்போது இரவு வேழைகளில் ஆலய வழாகத்தில் கூத்துக் கழரி அமைத்து பல நாட்டுக் கூத்துக்கள் அரங்கேற்றப்படுகின்றன. அதுமட்டுமல்லாது, தமிழர் பாரம்பரியக் கலைகளான கும்மி, கரகம், கோலாட்டம் போன்றனவும் இங்கு மறையாமல் காணப்படுகின்றன.
பிரபலமானவர்கள்
- ஸ்ரீ சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகள்
- கலாபூசணம் பாலகப்போடி அண்ணாவியார்
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி க. தங்கேஸ்வரி