கண்ணதாசன் கவிதைகள் (நூல்)
கண்ணதாசன் கவிதைகள் | |
---|---|
நூல் பெயர்: | கண்ணதாசன் கவிதைகள் |
ஆசிரியர்(கள்): | கண்ணதாசன் |
வகை: | இலக்கியம் |
துறை: | கவிதை |
இடம்: | சென்னை |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 328 |
பதிப்பகர்: | காவியக் கழகம் 4 இராசகோபால நாயக்கன் சந்து சிந்தாரிப்பேட்டை சென்னை 600 002 |
பதிப்பு: | மு.பதிப்பு: சனவரி 1959 |
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” என்னும் இதழில் வெளிவந்த “காலை குளித்தெழுந்து” எனத் தொடங்கும் கவிதை முதல் 1959 ஆம் ஆண்டு [1] சனவரித் திங்கள் முதல் நாள் எழுதிய “கிழவன் சேதுபதி” என்னும் கவிதை வரை கண்ணதாசன் எழுதிய பல கவிதைகளில் இருந்து சில கவிதைகளை கவிஞர் நாக. முத்தையா தேர்ந்தெடுத்து எட்டு பிரிவுகளின் கீழ் தொகுத்திருக்கிறார். அவர் “சில சொற்கள்” என்னும் தலைப்பில் ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். [2] “பதிப்பகத்தார் உரையை” காவியக்கழகத்தின் உரிமையாளர் கண்ணப்பா வள்ளியப்பன் எழுதியிருக்கிறார். இந்நூலின் மூன்றாம் பதிப்பு 1960ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கிறது. [3] நான்காம் பதிப்பு 1968ஆம் ஆண்டில் வானதி பதிப்பகத்தின் வழியாக வந்திருக்கிறது. [4]
உள்ளே
இந்நூலின் உள்ளே பின்வரும் படைப்புகள் இடம்பெற்றுள்ளன:
பழம் பாடல் புதுக் கவிதை
- உழவு
- கலவி முடியாக் காமம்
- தூணைத் தழுவிய தோகை
- என் கண் புகுந்தான் இரா
- தலைவி மயக்கம்
- பட்டினங் காப்பு
வாழ்க்கையும் வனப்பும்
- சருகானாள்
- ஏன்?
- குழந்தை ஒரு தொல்லை
- கணவன் ஒரு தொல்லை
- இரவே போதும்
- பாடாய் தும்பி
பிரிவும் பரிவும்
- கலையா வாணன்
- அருவி ஓய்ந்தது
- அம்பேத்கார்
- வள்ளல் அழகப்பா மறைந்தார்
- ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
- டாக்டர் நாயுடு
- விடுதலை வீரர் நாகி
குறியும் கொள்கையும்
- தமிழா தமிழா
- கடற்கரையில் அண்ணா
- எட்டுத் திசையிலும் நாம்
- அண்ணா நாற்பது
- வருக வாழ்க
- தமிழைக் காப்போம்
- மெல்லத் தமிழ் இனிச் சாகும்
- அடிமை விலங்கறுப்பீர்
- இலக்கியம்
காவியம்
- மாங்கனி
- ஆட்டனத்தி ஆதிமந்தி
இசையும் பாட்டும்
- தென்னாடே
- பொன்னான திருநாள்
- உனக்கும் எனக்கும்
- இல்லற ஜோதி
- தென்பாண்டி மண்டலமே
- போருக்குப் புறப்படடா
- மழைகூட ஒருநாளில்
- பிள்ளையின் பெருமை
- அண்ணா கலைவாணா
- ஒரே வழி
- பணநாதா
- அன்பும் அறமும்
- உறவு வரும்
பல்சுவை
- நமக்கொரு திருநாள்
- அழகி
- உறுதி
- கவியரங்க முன்னுரை
- முகம் மலர வரவேற்கின்றோம்
- கிழவன் சேதுபதி
முதல் பாட்டு
சான்றடைவு
- ↑ முத்தையன், பொன்; கண்ணதாசன் காப்பியங்கள்: சமூக வரலாற்று அரசியல் பின்னணி; முனைவர் பட்ட ஆய்வேடு; அரசினர் கல்லூரி, கும்பகோணம்; 1998; பக்.305
- ↑ கண்ணதாசன், கண்ணதாசன் கவிதைகள், சென்னை, காவியக்கழகம், 1959
- ↑ சங்கீதா, பா; கண்ணதாசன் படைப்புகளில் பெண்ணியம்; முனைவர் பட்ட ஆய்வேடு; தமிழ் ஆய்வு மையம், ஏ.பி.சி.மகளிர் கல்லூரி, தூத்துக்குடி; பக்.213
- ↑ கவிதா, சு; கண்ணதாசன் கவிதைகளில் அகத்திணைக்கூறுகள்; முனைவர் பட்ட ஆய்வேடு; அரசர் கல்லூரி, திருவையாறு; 2013