கண்ணகாரன் கொற்றனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கண்ணகாரன் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது.[1]

கண்ணகாரன் என்னும் சொல் கருத்தாழம் மிக்கவரைக் குறிக்கும். (கண் = கருத்து, மனக்கண்)

பாடல் தரும் செய்தி

இப்பாடல் 'மனை மருட்சி' என்னும் துறை பற்றியது. தலைவன் செயலைக் கண்டு செவிலி மருண்டு சொல்கிறாள்.

அன்று தோழியர் ஆயத்தோடு 'ஓரை' விளையாடிக் கொண்டிருந்தாள். தலைவன் நயமாக நொச்சிச் செடிப் பக்கம் அழைத்துச் சென்று கூடினான். இன்று ஆயத்தைப் பார்த்தாலும், இவன் தன்னை எடுத்துக்கொண்ட நொச்சிச் செடியைப் பார்த்தாலும் அவளுக்குக் கண்ணீர் வருகிறது. என்றாலும் அங்கிருக்கும் கிளியைப்பார்த்து ஏதோ பேசுகிறாள். ஊரெல்லாம் அங்குமிங்குமாக அம்பல் பேசுகிறது. தலைவன் ஏதும் தெரியாதவன் போல வந்து 'உன் கூந்தல் மணக்கிறது' என்கிறான். இதைப் பார்த்தால் எனக்கு வியப்பாகத் தோன்றுகிறது - என்கிறாள் செவிலி.

'ஐதேகு அம்ம!' = வியப்பாக உள்ளது.

மேற்கோள் குறிப்பு

  1. 143. பாலை
    ஐதே கம்ம யானே; ஒய்யென,
    தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து,
    ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
    நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்,
    கிள்ளையும், கிளை எனக் கூஉம்; இளையோள் 5
    வழு இலள் அம்ம, தானே; குழீஇ,
    அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
    இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
    அறியேன் போல உயிரேன்;
    நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே. 10

"https://tamilar.wiki/index.php?title=கண்ணகாரன்_கொற்றனார்&oldid=12361" இருந்து மீள்விக்கப்பட்டது