கணினித்தமிழ் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கணினித்தமிழ் என்பது இல.சுந்தரம் என்பவர் எழுதிய ஒரு நூல் ஆகும். கணினி செயல்படும் வகைகளை எளிதில் புரிந்து கொள்ளவும், வன்பொருள், மென்பொருள், தொழில் நுட்பம் பற்றி அறிமுக நிலையில் தெரிந்துகொள்ளவும், தமிழ் மொழியை எவ்வாறு கணினிப்படுத்தலாம் என்பனவற்றையும், இணையத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்ளவும் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் ஐந்து அலகுகளைக் கொண்டுள்ளது.

கணினியின் கட்டமைப்பும் செயல்பாடும்

கணினியின் கட்டமைப்பு, அதன் பாகங்கள், அவற்றின் செயல்கள், கணினியின் வன்பொருள், மென்பொருள், தொழில் நுட்பங்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும்

கணினியில் தமிழைப் பயன்படுத்தும் வழி வகைகளையும் மென்பொருள்களை பெறும் முறைகள் தமிழைத் தட்டச்சு செய்யும் முறைகள் ஆகியன பற்றியும் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

தமிழ் மென்பொருள் வகைப்பாடும் வளர்ச்சியும்

தமிழ் மென்பொருகள் தோன்றிய வரலாறு சொற்பிழைத் திருத்தி சந்திப் பழித் திருத்தி தமிழ்ச் சொல் சுட்டி இலக்கணப் பிழைத் திருத்தி ஆகியன பற்றியும் இணையத்தில் தமிழ், பேச்சு எழுத்து மாற்றி, ஒளி எழுத்து உணரி, கையெழுத்துணரி பற்றியும் எழுதப் பட்டுள்ளன

இணையமும் தமிழ்ப் பயன்பாடும்

இணையத்தின் அடிப்படைப் பயன்கள், இணைய தள முகவரிகள், வலைப்பூக்கள், மின்நூல்கள் ஆக்கம், அச்சு நூல்கள் வாங்குவதற்கு உதவும் இணைய நூல் அங்காடிகள், கையடக்கக் கணினி, செல்பேசி, மின்நூல் படிப்பான் ஆகியன தொடர்பான செய்திகள் இந்நூலில் உள்ளன.

இணையவழிக் கற்றலும் கற்பித்தலும்

இணையத்தின் வழியாக தமிழ்க் கல்வியைக் கற்றுக் கொள்ளவும் பிறருக்குக் கற்பிக்கவும், இணைய வழிக் கலந்துரையாடல், இணையநூலகப் பயன்பாடு, மின் கற்றலின் பண்புகள், வகைகள், பயன்கள் முதலியனவும் விளக்கப்பட்டுள்ளன. முகநூல், டுவிட்டர், இசுகைப் மின் வணிகம், விக்கிப்பீடியா, நிகழ்பதிவு (வாட்சப்) யூ டியூப், லிங்கிடின் ஆகியன பற்றியும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். இப்புத்தகத்தின் இறுதியில் ஐந்து இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

  • கலைச் சொற்கள்
  • சொல் விரிவாகங்கள்
  • கோப்புகளின் விரிவாக்கங்கள்
  • குறுக்கு விசைகள்
  • துணை நூல் பட்டியல்

இப்புத்தகம் விகடன் பிரசுரத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. மு. பொன்னவைக்கோ, ந. தெய்வசுந்தரம், வெ. கிருட்டிணமூர்த்தி ஆகிய கணினி அறிஞர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளனர்.

சான்று

கணினித்தமிழ், ஆசிரியர்: இல.சுந்தரம், விகடன் பிரசுரம்,அண்ணா சாலை, சென்னை-600002

"https://tamilar.wiki/index.php?title=கணினித்தமிழ்_(நூல்)&oldid=16089" இருந்து மீள்விக்கப்பட்டது