கடைசீல பிரியாணி
கடைசீல பிரியாணி | |
---|---|
இயக்கம் | நிஷாந்த் கலிதிண்டி |
தயாரிப்பு | எஸ். சசிகாந்த்<br / சக்ரவர்த்தி ராமச்சந்திரன் நிஷாந்த் கலிதிண்டி |
திரைக்கதை | நிஷாந்த் கலிதிண்டி விவேகானந்த் கலைவாணன் |
இசை | ஜூடா பால் நீல் செபாஸ்டியன் |
நடிப்பு | வசந்த செல்வம் தினேஷ் பாண்டி விஜய் ராம் |
ஒளிப்பதிவு | அசீம் முகமது ஹெசின் ஜோஸ் ஜோசப் |
கலையகம் | வை நொட் ஸ்டூடியோஸ் |
விநியோகம் | வை நொட் ஸ்டூடியோஸ் |
வெளியீடு | நவம்பர் 19, 2021 |
ஓட்டம் | 113 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கடைசீல பிரியாணி (Kadaseela Biriyani) என்பது 2021ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான கருப்பு நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை நிஷாந்த் கலிதிண்டி என்பவர் இணைந்து எழுதி இயக்கியிருந்தார். நிஷாந்த் கலிதிண்டி அறிமுக இயக்கத்தில் உருவான இப்படம் 2018இல் நிறைவுற்ற போதிலும்,[1] அதன் திரையரங்கு வெளியீடு 19 நவம்பர் 2021 தான் நடந்தது. இந்த படத்தில் வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் விமர்சன ரீதியாகப் பாராட்டைப் பெற்றனர்.[2][3][4][5] படத்தில் மலையாள வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
கதை
மூன்று சகோதரர்கள் தங்கள் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க உள்ளூர் நில உரிமையாளரின் ரப்பர் தோட்டத்திற்குள் நுழைகிறார்கள். ஆனால் நில உரிமையாளரின் வெறி பிடித்த மகனால் அவர்கள் எதிர்பார்க்கப்படுவதால் விதி கொடூரமான திட்டங்களைக் கொண்டுள்ளது.[6]
நடிகர்கள்
- மூத்த மகன் பெரிய பாண்டியாக வசந்த் செல்வம்[4]
- இரண்டாவது மகன் இல பாண்டியாக தினேஷ் பாண்டி [4]
- சிக்கு பாண்டியாக விஜய் ராம், இளைய மகன் [4]
- கேரள ரப்பர் தோட்ட உரிமையாளராக விஷால் ராம் [4]
- மனநோயாளி மகனாக அக்கிம் ஷாஜகான் [4]
- பாண்டி சகோதரர்களின் தாயாக ஸ்டெல்லா [4]
- பாண்டி சகோதரர்களின் தந்தையாக அருள் [4]
விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
ஒலிப்பதிவு
இப்படத்திற்கு ஜூடா பால், நீல் செபாஸ்டியன் ஆகிய இருவரும் இசையமைத்துள்ளனர். ஒலிப்பதிவுத் தொகுப்பில் உமாதேவி, சுஹைல் கோயா, தென்சின் ரங்டோல், பயல் ஜான் , சோலார் சாய் எழுதிய பாடல் வரிகளுடன் ஏழு பாடல்கள் இடம்பெற்றன.
சான்றுகள்
- ↑ Darshan, Navein (24 November 2021). "Baahubali showed more violence than we did: Kadaseela Biriyani director Nishanth Kalidindi". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 13 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211213044622/https://www.newindianexpress.com/entertainment/tamil/2021/nov/24/baahubali-showed-more-violence-than-we-did-kadaseela-biriyani-directornishanth-kalidindi-2387278.html.
- ↑ Darshan, Navein (19 November 2021). "'Kadaseela Biriyani' Review: A dark, yet hilarious film". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 25 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211125110727/https://www.newindianexpress.com/entertainment/review/2021/nov/20/kadaseela-biriyani-review-a-dark-yet-hilarious-film-2385732.html.
- ↑ "Kadaseela Biriyani review: An amusing thriller". Sify. 19 November 2021. Archived from the original on 20 November 2021. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 Suganth, M (19 November 2021). "Movie Reviews – Tamil – Kadaseela Biriyani". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 24 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211124205741/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kadaseela-biriyani/movie-review/87776762.cms.
- ↑ "Kadaseela Biriyani review: An amusing thriller". சிஃபி. 19 November 2021. Archived from the original on 20 November 2021. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
- ↑ "The intriguing trailer of Kadaseela Biriyani is here!". சினிமா எக்ஸ்பிரஸ். 3 November 2021 இம் மூலத்தில் இருந்து 25 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211125111913/https://www.cinemaexpress.com/tamil/videos/2021/nov/03/the-intriguing-trailer-of-kadaseela-biriyani-is-here-27634.html.