கடுவலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கடுவலை
කඩුවෙල
புறநகர்
நாடு இலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
அஞ்சற் குறியீடு
10640
இணையதளம்www.kaduwela.mc.gov.lk

கடுவலை (Kaduwela, சிங்களம்: කඩුවෙල, கடுவெல) என்பது இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு நகரத்தின் ஒரு புறநகர்ப் பகுதி ஆகும். இது கொழும்பு நகர மத்தியிலிருந்து கொழும்பு-அவிசாவளை பழைய வீதியில் சுமார் 16 கி.மீ தொலைவிலும், கொள்ளுப்பிட்டியில் இருந்து புதிய கண்டி வீதியில் வழியே 18கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்நகரம் கடுவலை மாநகர சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது.

பெயர்க் காரணம்

இது கடு (வாள்), தேவால(ஆலயம்) எனும் சொற்களிலிருந்து உருவான கடுதேவால எனும் பெயரால் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது.

கடுவலை ஆரம்பத்தில் கடுதேவோலா என அழைக்கப்பட்டது. கடு (வாள்), தேவோலா (ஆலயம்) என்ற சொற்களில் இருந்து இது உருவானது. கண்ணகியின் வடிவமாக சிங்கள மக்களால் வழிபடப்படுகின்ற பத்தினி அம்மன் கோவில் இங்குள்ளது. இக்கோவிலில் இடம்பெறும் "நீர் வெட்டு" வழிபாட்டில் பொன்னாலான வாள் பாவிக்கப்படுகிறது. இக்கோவில் புராண ரங்காடு பத்தினி மகா தேவாலயம் என அழைக்கப்படுகிறது.

ஃபுட் என்பவரின் 18வது படையணியைச் சேர்ந்த ரொபர்ட் பேர்சிவல் என்பவரின் கருத்துப்படி, டச்சு ஆட்சிக்கு எதிராக 1797 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிளர்ச்சியில், சிங்களவர்கள் இங்கு கோட்டையைக் கட்டினர்.

1வது கண்டிப் போரில் பிரித்தானியர் தோல்வியடைந்ததை அடுத்து, பிரித்தானிய சிப்பாய்கள் சிலரும் உள்ளூர் போர் வீரர்களும் கடுவலையில் வந்து தங்கியிருந்தனர்.

கடுவலை மாநகர சபை

கடுவலை மாநகர சபையில் உள்ள பிரதேசங்கள்:

மேற்கோள்கள்

வார்ப்புரு:Suburbs of Colombo

"https://tamilar.wiki/index.php?title=கடுவலை&oldid=39073" இருந்து மீள்விக்கப்பட்டது