கசாலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காசாலி என்பவர் தமிழ்த் திரைப்பட உலகில் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், நடிகரென பன்முகத் தன்மைக் கொண்டவர். இவர் பிப்ரவரி 16, 2018 இல் மனுசனா நீ என்ற திரைப்படத்தினை வெளியிட்டார். அத்திரைப்படத்தினை தயாரித்து, இயக்கி நடிக்கவும் செய்ததோடு, இசையும் அமைத்திருந்தார்.

திரை வாழ்க்கை

பத்திரிக்கை துறையில் பணியாற்றியப் பின்பு, சில காலம் மருத்துவ துறையிலும் கசாலி பணியாற்றினார். அதனால் அங்கு மருத்துவர்கள் கூட அறியாமல் நடைபெறும் மருந்துலகம் பற்றிய தகவல்களைப் பெற்றார். அதன் பாதிப்பினால் திரைப்படம் எடுக்க முன்வந்தார்.[1] மருத்துவத்துறை சார்ந்த திகில் திரைப்படமாக மனுசனா நீ திரைப்படம் இருந்தது. இத்திரைப்படம் அன்று மாலையே இணையதளத்தில் வெளியானது. [2] கசாலி அத்திரைப்படத்தினை எந்த திரையரங்கில் திருட்டுதனமாக எடுத்து இணையத்தில் விட்டனர் என்பதை கண்டறிந்தார்.

மனுசனா நீ திரைப்படத்தின் தலைப்பு சாய்ந்தாடு சாய்ந்சதாடு என வைத்திருந்தார். பிறகு அந்த தலைப்பினை மாற்றிவிட்டார்.[1] இந்த திரைப்படத்தில் மருத்துவர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கசாசிக்கு எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன.

திருட்டு விசிடி, இணையதள திருட்டு

இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிவியல் பூர்வமாக நடைபெறும் திரைப்படங்களை திருடும் முறையைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்பு இன்விசிபில் வாட்டர்மார்க் என்ற யுத்தியின் மூலம் திரைப்படத்தினை திருடும் இடம், நேரம் போன்ற தகவல்களை அறியும் முறையையும், திரைப்படங்களை திருடுபவரை அறியவும் புதிய வழியை கண்டறிந்தார். அதனால் தமிழ்த் திரைப்பட உலகில் பிரபலமானவராக அறியப்படுகிறார்.[3]

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 "மருத்துவ உலகின் பயங்கர மறுபக்கம் : திகில் கிளப்ப வரும் தமிழ்ப்படம்". இந்து தமிழ் திசை. https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article5393236.ece. 
  2. "களத்தில் இறங்கிய கஸாலி..! - கை கொடுத்த ஜூனியர் விகடன்.! - Tamilscreen". DailyHunt. http://m.dailyhunt.in/news/india/tamil/tamilscreen-epaper-tamscr/kalathil+irangiya+kasali+kai+kodutha+jooniyar+vikadan-newsid-82706581. 
  3. "ஆன்லைன் பைரஸியைத் தடுக்க இதுதான் வழி!" - இயக்குநர் கஸாலி". ஆனந்த விகடன். https://cinema.vikatan.com/kollywood/131444-online-piracy-criminals-are-getting-anticipatory-bail-whats-the-reason. பார்த்த நாள்: 14 May 2024. 
"https://tamilar.wiki/index.php?title=கசாலி&oldid=20877" இருந்து மீள்விக்கப்பட்டது