கஃபேடைட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கஃபேடைட்டு
Cafetite
பச்சை இலிசார்டைட்டு மற்றும் கால்சைட்டு கனிமங்களுடன் மஞ்சள் கஃபேடைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடு(Ca,Mg)(Fe,Al)
2
Ti
4
O
12
·4(H
2
O)
இனங்காணல்
நிறம்வெளிர் மஞ்சள் முதல் நிறமற்றது வரை
படிக இயல்புநீளமான நெடுவரிசை முதல் ஊசிப்படிகங்கள் வரை , இழைத் திரட்டுகள், போலி-நேர்ச்சாய்சதுரம்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புபட்டகம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை4–5
மிளிர்வுவிடாப்பிடியானது
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி3.28
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (–), 2V=58°, பரவல் மிகவும் வலுவானது, r > v
ஒளிவிலகல் எண்nα = 1.95, nβ = 2.08, nγ = 2.11
பலதிசை வண்ணப்படிகமைஇல்லை
2V கோணம்அளக்கப்பட்டது: 38°
மேற்கோள்கள்[1][2][3][4]

கஃபேடைட்டு (Cafetite) என்பது (Ca,Mg)(Fe,Al)2Ti4O12·4(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கஃபேடைட்டு கனிமத்தை Cft[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

தைட்டானியம் ஆக்சைடு கனிமமான இக்கனிமம் அதன் Ca-Fe-Ti என்ற இயைபின் அடிப்படையில் கஃபேடைட்டு எனப் பெயரிடப்பட்டது.[4]

முதன்முதலில் 1959 ஆம் ஆண்டு உருசியாவின் வடக்குப் பகுதியின் கோலா தீபகற்பம், மர்மன்சுகச்சா ஒப்லாசுட்டு, ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கா மலைத்தொடரில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டது.[3][2] கோலா தீபகற்பத்தின் கிபினி மற்றும் கோவ்டோர் மலைத்தொடரிலிருந்தும், அமெரிக்காவின் மொன்டானாவின் மீகர் மாகாணத்திலும் கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது.[3]

பெக்மாடைட்டு பாறைகளில் பைராக்சனைட்டு ஊடுருவலில் மியாரோலிடிக்கு குழிகளில் படிகங்களாகக் காணப்படுகிறது. இல்மனைட்டு, டைட்டானிஃபெரசு மேக்னடைட்டு, தைட்டானைட்டு, அனடேசு, பெரோவிசுக்கைட்டு, பேட்டெலைட்டு, புளோகோபைட்டு, கிளினோக்ளோர் மற்றும் காசைட்டு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. Mineralienatlas
  2. 2.0 2.1 2.2 Handbook of Mineralogy
  3. 3.0 3.1 3.2 Mindat.org
  4. 4.0 4.1 Webmineral.com
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=கஃபேடைட்டு&oldid=309570" இலிருந்து மீள்விக்கப்பட்டது