ஓ. கு. மகேஸ்வரி
Jump to navigation
Jump to search
ஓ. கு. மகேஸ்வரி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஓ. கு. மகேஸ்வரி |
---|---|
பிறந்ததிகதி | ஆகத்து 4 1962 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
ஓ. கு. மகேஸ்வரி (பிறப்பு: ஆகத்து 4 1962) தமிழ்நாடு சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஸி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளி, செயிண்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி மற்றும் பெண்டிக் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். தமிழ், ஆங்கிலம், சௌராஸ்டிரம், தெலுங்கு போன்ற மொழிகளில் இவருக்கு தேர்ச்சியுண்டு.
இலக்கியப் பணி
1977ல் எழுத்துலகில் பிரவேசித்த இவரின் முதல் படைப்பான ‘நினைவு’ எனும் சிறுகதை ‘சூரியன்’ எனும் கையெழுத்துப் பத்திரிகையில் வெளிவந்தது. இதுவரை இவர் 20 சிறுகதைகளை எழுத்துலகிற்கு வழங்கியுள்ளார்.
பெற்ற விருதுகளும், கௌரவங்களும்
- தெளிவு பிறந்த போது எனும் இவரின் கதைக்கான பாராட்டு, விருது (1996)
- இருபது வெள்ளி எனும் இவரின் சிறுகதைக்கான 1ம் பரிசு (1997)
- தலைமுறைக் கனவுகள் எனும் இவரின் சிறுகதைக்கான 1ம் பரிசு
உசாத்துணை
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு