ஓதற்பிரிவு
Jump to navigation
Jump to search
ஓதற்பிரிவு என்றால் என்ன *
- ஓதற்பிரிவு என்பது கணவன் கல்வி கற்பதற்காக வெளிநாட்டு செல்வது ஆகும்.
- இவ்வகையிலானப் பிரிவென்பது மூன்றாண்டுகள் வரை நீடிக்கலாம்.
- ஓதற்பிரிவின்போது தலைவன் தலைவியை நினைத்துப் புலம்புவதோ இடையில் திரும்புவதோ இல்லை.இதுவே ஓதற்பிரிவு ஆகும்.
இலக்கியத்தில் ஓதற்பிரிவு
இல்லறத்தின் போது, தலைவன் வேற்று நாட்டுக்குச் சென்று ஆங்குள்ளோருக்குத் தான் அறிந்தவற்றைக் கற்பித்தும், அவர்களிடம் இருந்து கற்றும் வருவான். தொல்காப்பியத்தில் இவ்வாறு பிரியும் காலம் "ஓதற்பிரிவு" எனச் சொல்லப்பட்டுள்ளது.[1] (தொல். பொ. 25.)[2] இதற்கு மூன்று ஆண்டு காலம் எனவும் வகுக்கிறது.[1]
இவ்வாறு தமிழ்நாட்டிற்கும் பல இடங்களில் இருந்தும் பலர் வந்து கற்றுச் சென்றுள்ளனர். திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகிய மடங்கள் பல ஆண்டுகளாகத் தமிழ், வட மொழிக் கல்லூரிகளாக இருந்துள்ளன.[1]
மாணிக்கவாசகர் தனது எட்டாம் திருமுறையில் ஓதற்பிரிவை நான்காக வகுத்துள்ளார்:[3][4]
- கல்விநலங்கூறல்
- பிரிவுநினைவுரைத்தல்
- கலக்கங்கண்டுரைத்தல்
- வாய்மொழிகூறித் தலைமகள் வருந்தல்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 ஓதற்பிரிவு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தமிழ்
- ↑ University of Madras Lexicon
- ↑ ஓதற்பிரிவு, திருக்கோவையார் - எட்டாம் திருமுறை], TVU.ORG
- ↑ 08.கோவை.020 ஓதற்பிரிவு, shaivam.org