ஒற்றார்
Jump to navigation
Jump to search
ஒற்றார் Отырар Отрар | |
|---|---|
கசகஸ்தானில் ஒற்றாரின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 42°51′09″N 68°18′10″E / 42.85250°N 68.30278°E | |
| நாடு | கசகஸ்தான் |
| மாகாணம் | தெற்கு கசகஸ்தான் மாகாணம் |
| நிறுவப்பட்டது | before 8ம் நூற்றாண்டு |
| ஏற்றம் | 506 m (1,660 ft) |
| நேர வலயம் | ஒசநே+06:00 (அல்மாடி நேரம்) |
| அஞ்சல் எண் | 160000 |
ஒற்றார் (Otrar) அல்லது உற்றார் (Utrar) (காசாக்கு: Отырар, ஒத்தீறார்); அல்லது பராப் (Farab) என்பது ஒரு நடு ஆசிய பேய்ப் பட்டணம் ஆகும். இது ஒரு காலத்தில் நகரமாக இருந்தது. இது கசகஸ்தான் நாட்டின் வழியாகச் செல்லும் பட்டுப்பாதையில் அமைந்திருந்தது. நடு ஆசியாவின் வரலாற்றில் ஒற்றார் ஒரு முக்கியமான நகரம் ஆகும். நிலையான மற்றும் வேளாண்மை நாகரிகங்களின் எல்லையில் இது அமைந்திருந்தது. ஒரு பாலைவனச் சோலையின் மையமாக அமைந்திருந்தது. இது ஒரு அரசியல் மாவட்டமும் ஆகும். சீனா, ஐரோப்பா, அண்மைக் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு, சைபீரியா மற்றும் உரல் பகுதிகளை கசகஸ்தானுடன் இணைக்கும் முக்கியப் புள்ளியாக இது விளங்கியது.