ஒற்றளபெடை
Jump to navigation
Jump to search
ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.
ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் ஆகிய பதினோரு எழுத்துகளும் தனிமொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ - நன்னூல்.எழு.92
எ.கா:
வெஃஃகு வார்க்கில்லை | குறிற்கீழ் இடை |
கண்ண் கருவிளை | குறிற்கீழ் கடை |
கலங்ங்கு நெஞ்ச்மிலை | குறிலிணைகீழ் இடை |
மடங்ங் கலந்த மன்னே | குறிலிணைகீழ் கடை |
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம்.
ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்.