ஒரோஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஒரோஸ்

சிந்துதுர்க்நகரி[1]

மாவட்டத் தலைமையிடம்
பேரூராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சிந்துதுர்க் மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,311
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
416812
தொலைபேசி குறியீடு02362
வாகனப் பதிவுMH-07
எழுத்தறிவு99%

ஒரோஸ் (Oros), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் பேரூராட்சி ஆகும். இந்நகரம் மும்பைக்கு தெற்கே 462.3 கிலோ மீட்டர் தொலைவிலும்; கோவாவுக்கு வடக்கே 135.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்நகரம் கொங்கண் பிரதேசத்தில் உள்ளது. இந்நகரத்தில் மராத்திய மொழியுடன் வட்டார மொழியான கொங்கணி மொழியும் பேசப்படுகிறது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1352 குடியிருப்புகள் கொண்ட ஓரொஸ் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 5311 ஆகும். அதில் 2685 ஆண்கள் மற்றும் 2626 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.32% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 929 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.13% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 669 மற்றும் 161 வீதம் உள்ளனர்.[2]

போக்குவரத்து

சாலைகள்

கொச்சி-மும்பையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 17 ஒரோஸ் நகரம் வழியாகச் செல்கிறது.

இருப்புப்பாதை

ஒரோஸ் அருகே 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த சிந்துதுர்க் தொடருந்து நிலையம்[3], கொங்கண் இரயில்வே மூலம் ஒரோஸ் நகரத்தை கொச்சி, கோவா, கார்வார், மங்களூர், மும்பை மற்றும் தானே நகரங்களுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்

  1. "District Profile". Retrieved 12 January 2021.
  2. "Oras Bk. Village Population - Kudal - Sindhudurg, Maharashtra". www.census2011.co.in. Retrieved 2025-04-25.
  3. "Sindhudurg railway station", Wikipedia (in ஆங்கிலம்), 2024-07-29, retrieved 2025-04-25
"https://tamilar.wiki/w/index.php?title=ஒரோஸ்&oldid=305717" இலிருந்து மீள்விக்கப்பட்டது