ஒசாமு தெசூகா
| ஒசாமு தெசூகா | |
|---|---|
| படிமம்:Osamu Tezuka 1951 Scan10008-2.JPG 1951இல் தெசூகா | |
| பிறப்பு | (手塚 治 தெசூகா ஒசாமு?) 3 நவம்பர் 1928 டொயொனாகா, ஒசாகா, சப்பான் |
| இறப்பு | 9 February 1989 (aged 60) டோக்கியோ, சப்பான் |
| குடிமகன் | சப்பானியர் |
| துறை (கள்) |
|
| கவனிக்கத் தக்க வேலைகள் |
|
| துணை | எட்சூகோ ஒகாடா (m. 1959–89) |
Influences | |
Influenced
| |
ஒசாமு தெசூகா (手塚 治虫, born 手塚 治 தெசூகா ஒசாமு ?, நவம்பர் 3, 1928 – பிப்ரவரி 9, 1989) என்பவர் சப்பானிய மாங்கா கலைஞரும், கேலிப்பட ஓவியரும், அசைவூட்டப் படக்கலைஞரும், திரைப்படத் தயாரிப்பாளரும், களச்செயல்பாட்டாளரும் ஆவார். ஒசாகா மாநிலத்தில் பிறந்த இவர், அஸ்ட்ரோ பாய், கிம்பா தி ஒயிட் லயன், பிளாக் ஜாக் போன்ற வரைகதை (காமிக்ஸ்) தொடர்களைப் படைத்ததன் பொருட்டு நன்கு அறியப்படுகிறார். அவர் குன்றாத ஊக்கத்துடன் படைப்புகளை ஏராளமாக உருவாக்கியமை, தொழில்நுணுக்கங்களில் முன்னோடியாகச் செயல்பட்டமை, பல்வேறு வகைமைகளைப் புதுமையாக மறுவரையறை செய்தமை ஆகிய காரணங்களுக்காக "மாங்காவின் தந்தை", "மாங்காவின் ஞானத்தந்தை", "மாங்காவின் கடவுள்" என்றெல்லாம் போற்றப்படுகிறார். மேலும், அவரது தொடக்க நாட்களில் தமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த வால்ட் டிஸ்னிக்கு இணையான ஒரு சப்பானியராகவே கருதப்படுகிறார்.[1]
மேற்கோள்கள்
- ↑ Tezuka Osamu Monogatari, Tezuka Productions, 1992.