ஆள்கூறுகள்: 28°40′S 137°20′E / 28.667°S 137.333°E / -28.667; 137.333

ஐர் ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கடி தாண்டா -ஐர் ஏரி
An infrared satellite photo of Lake Eyre
1999 இல் லேண்ட்சாட் 7 செயற்கைக்கோள் மூலம் எடுக்கபட்ட ஏரியின் புகைப்படம்
A map of South Australia with a mark indicating the location of Kati Thanda–Lake Eyre
A map of South Australia with a mark indicating the location of Kati Thanda–Lake Eyre
கடி தாண்டா -ஐர் ஏரி
ஐர் ஏரிப் படுகையின் வரைபடம்
அமைவிடம்தூர வடக்குப் பகுதி, தெற்கு ஆத்திரேலியா
ஆள்கூறுகள்28°40′S 137°20′E / 28.667°S 137.333°E / -28.667; 137.333
ஏரி வகைபழமையான ஏரி
முதன்மை வரத்துவார்பர்ட்டன் ஆறு
வடிநில நாடுகள்ஆத்திரேலியா
மேற்பரப்பளவு9,500 km2 (3,668 sq mi) (max)
சராசரி ஆழம்1.5 m (5 அடி) (ஒவ்வொரு 3 வருடங்கள்), 4 m (13 அடி) (ஒவ்வொரு பத்தாண்டுகள்)
கடல்மட்டத்திலிருந்து உயரம்−9 m (−30 அடி) (shoreline when full);
−15 m (−49 அடி) (lowest point when empty)
உப்பு உறைந்து காணப்படும் கடி தாண்டா-ஐர் ஏரியின் மேல் பகுதி
விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் , பாசி படர்ந்த கடி தாண்டா-ஐர் ஏரி இளஞ்சிவப்பு நிறமாகத் தோன்றுகிறது.

'ஐர் ஏரி ( Lake Eyre ) அதிகாரப்பூர்வமாக கடி தாண்டா -ஐர் ஏரி ( Kati Thanda–Lake Eyre ) எனவும் அழைக்கப்படும் அடிலெய்டுக்கு வடக்கே சுமார் 700 கிமீ (435 மைல்) தொலைவில் தெற்கு ஆஸ்திரேலியாவின் தூர வடக்குப் பகுதியின் கிழக்கு-மத்திய பகுதியில் உள்ள ஒரு ஏரி ஆகும். ஆழமற்ற ஏரியான இது ஆத்திரேலியாவின் மிகக் குறைந்த இயற்கைப் புள்ளியைக் கொண்டுள்ளது. மேலும், இது கடல் மட்டத்திற்கு கீழே சுமார் 15 மீ (49 அடி) கீழே உள்ளது. அரிதான சந்தர்ப்பங்களில், இது முழுமையாக நிரம்புகிறது. ஆனாலும் இது ஆத்திரேலியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. இது 9,500 கிமீ2 (3,668  சதுர மைல்) பரப்பளவை கொண்டுள்ளது. ஏரி நிரம்பும்போது, அது கடல்நீரைப் போன்ற அதே உவர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் ஏரி வறண்டு, நீர் ஆவியாகும்போது உவர்ப்புத் தன்மை குறைந்து உயிர்ச்சூழலை உண்டாக்குகிறது

1840 இல் ஏரியைப் பார்த்த முதல் ஐரோப்பியரான எட்வர்ட் ஜான் ஐரின் நினைவாக இந்த ஏரிக்கு பெயரிடப்பட்டது. இரட்டைப் பெயரிடும் கொள்கைக்கு இணங்க அதன் பழங்குடியினரின் பெயரான கடி தாண்டாவைச் சேர்த்து இது அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 2012 இல் மறுபெயரிடப்பட்டது. ஏரி மற்றும் சுற்றியுள்ள பகுதியின் பூர்வீக உரிமை அரபானா மக்களுக்கு உள்ளது [1]

பறவைகள் இடம் பெயர்தல்

ஆத்திரேலியாவின் தெற்கு கடலோரப் பகுதிகளிலிருந்தும், பப்புவா நியூ கினி போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் ஏரி நிரம்பியிருக்கும்போது கூழைக்கடாக்கள் மற்றும் பட்டை பறவைகள் இழுக்கப்படுகின்றன. 1989-1990 வெள்ளத்தின் போது, ஆத்திரேலியாவின் மொத்த எண்ணிக்கையில் 200,000 கூழைக்கடாக்கள் ( 80 சதவீதம்), ஐர் ஏரிக்கு உணவு சேகரிக்க மற்றும் தங்குவதற்கு வந்ததாக மதிப்பிடப்பட்டது. [2] பள்ளத்தாக்கிலிருந்து நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் கூட, ஏரியின் நிரம்பலைக் கண்டறியும் திறன் கொண்ட பறவைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை விஞ்ஞானிகளால் தற்போதும் கண்டறிய முடியவில்லை.[3]

ஏரியின் பரப்பளவு கடி தண்டா-ஐர் ஏரி தேசியப் பூங்கா மற்றும் எலியட் பிரைஸ் பாதுகாப்பு பூங்கா என இரண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக தெற்கு ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. [4]

ஆத்திரேலியாவில் உள்ள முக்கியமான ஈரநிலங்களின் அடைவு என அறியப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் பட்டியலில் ஐர் ஏரி உள்ளது.[5]

முக்கியமான பறவைப் பகுதி

பன்னாட்டு பறவை வாழ்க்கை என்ற அரசு சார்பற்ற அமைப்பு இந்த ஏரியை ஒரு முக்கியமான பறவை பகுதி அடையாளம் கண்டுள்ளது. அமைப்பின் முன்னுரிமைகளில் பறவை சிற்றினங்கள் அழிவதைத் தடுப்பது, பறவைகளுக்கான முக்கியமான தளங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பது, முக்கிய பறவை வாழ்விடங்களைப் பராமரித்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல் மற்றும் உலகளவில் பறவைப் பாதுகாப்பார்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். [6]

மேற்கோள்கள்

  1. "Dodd v State of South Australia [2012] FCA 519". Federal Court of Australia. 22 May 2012. Retrieved 18 August 2022.
  2. White, T. C. R. (2005). Why Does the World Stay Green?: Nutrition and Survival of Plant-eaters.
  3. Fantin, Elise (January 5, 2016). "Birds set to return to Lake Eyre to breed as inland lakes fills with water". ABC News (Australia). https://www.abc.net.au/news/2016-01-06/birds-set-to-return-to-lake-eyre-to-breed/7069228?section=sa. 
  4. "Kati Thanda-Lake Eyre National Park" (PDF). Department for Environment and Water (South Australia). Retrieved March 28, 2023.
  5. Morelli, Josephine; de Jong, Mark C. (2001). "9. South Australia" (PDF). In Larmour, Geoff; Young, Sarah (eds.). A Directory of Important Wetlands in Australia (Third ed.). Department of the Environment and Heritage. p. 78. ISBN 978-0-642-54721-7. Retrieved March 28, 2023.
  6. "Lake Eyre". BirdLife Data Zone. பன்னாட்டு பறவை வாழ்க்கை. 2008. Retrieved March 28, 2023.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=ஐர்_ஏரி&oldid=307620" இலிருந்து மீள்விக்கப்பட்டது