ஏ. எஸ். பொன்னம்மாள்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
A. S. Ponnammal
ஏ. எஸ். பொன்னம்மாள்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
1957–1962
முன்னையவர்முத்து & அய்யனார்
பின்னவர்அப்துல் அஜிசு
தொகுதிநிலக்கோட்டை
பதவியில்
1980–1984
முன்னையவர்ஏ. பாலுசாமி
பின்னவர்ஏ. பாலுசாமி
தொகுதிநிலக்கோட்டை
பதவியில்
1989–2001
முன்னையவர்ஏ. பாலுசாமி
பின்னவர்ஜி. அன்பழகம்
தொகுதிநிலக்கோட்டை
பதவியில்
1962–1967
முன்னையவர்புதிதாக உருவாக்கப்பட்டது
பின்னவர்பி. எஸ். மணியன்
தொகுதிசோழவந்தான்
பதவியில்
1984–1989
முன்னையவர்என். பழனிவேல்
பின்னவர்என். பழனிவேல்
தொகுதிபழநி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1927
அழகம்பட்டி, நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு25 நவம்பர் 2015
அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1946-1996)
தமிழ் மாநில காங்கிரசு (1996-2001)
காங்கிரசு சனநாயகப் பேரவை
வேலைஅரசியல்வாதி

ஏ.எஸ்.பொன்னம்மாள் (A. S. Ponnammal) (பிறப்பு 1927-இறப்பு: 24.11.2015)[1][2] இவர் ஒரு தமிழக அரசியல்வாதி. சமூக சேவகராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் செயலாற்றியவர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு , இந்திய தேசிய காங்கிரசு, தமிழ் மாநில காங்கிரசு கட்சி சார்பாகவும் தனித்தும் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், பழநி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் - 1957, 1962, 1967, 1971, 1980, 1984, 1989, 1991, 1996 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5][6]

இளமைக் காலம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அழகன்பட்டியில் சின்னசாமி, காலடி சின்னம்மாள் இணையரின் மூத்த மகளாக 25 செப்டம்பர் 1933 அன்று பிறந்தார். இவருக்கு மூன்று தங்கைகள். மூன்றாம் வகுப்பு வரை பக்கத்து ஊரான கமலாபுரத்தில் படித்தார். இவர் ஆங்கிலம் கற்க வேண்டி சின்னசாமி ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளிக்கு மாறினார். பியுசி முடித்த இவர் கூடுதலாக தட்டச்சு செய்யவும் கற்று கொண்டார். தாய் சின்னமாளின் அண்ணன் கோடாங்கி வீரனுக்கு இவரை திருமணம் செய்து வைத்தனர்.[7]

அரசியல் வாழ்க்கை

இவர் பிறந்த அழகன்பட்டி கிராமம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி. பட்டியலினத்தைச் சேர்ந்த படித்த 23 வயது பெண்ணான பொன்னம்மாளை இரட்டை உறுப்பினர் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.

1957 மார்ச் 31 அன்று நடைபெற்ற தேர்தலில் பொன்னம்மாளும் பட்டிவீரன் பட்டி ஆர். சந்திரசேகரனும் சோழவந்தான் தொகுதியின் இரட்டை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காமராஜர் ஆட்சி அமைந்தது. எட்டு பேர் கொண்ட அமைச்சரவையில் லூர்தம்மாள் சைமன் ஒரே பெண் அமைச்சராகப் பதிவியேற்றார். அவருடன் சட்டமன்ற உறுப்பினராக மூன்று பட்டியிலனப் பெண்கள் - பொன்னம்மாள், இராஜாத்தி குஞ்சிதபாதம், சத்தியவாணிமுத்து ஆகியோர் பதவியேற்றனர். 15 ஜூலை 1957 அன்று சட்டமன்றத்தில் காவல்துறைக்கு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கிய தீர்மானம் குறித்து முதல் முறையாகப் பொன்னம்மாள் உரையாற்றினார்.

உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 1958 ஆம் ஆண்டே பொன்னம்மாள் பேசியிருக்கிறார். பெண்களுக்காக பேசியது போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இவர் குரல் ஒலித்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களுக்கும் அரசுத் திட்டங்கள் கிடைக்க வேண்டுமென்று பேசியுள்ளார்.

மாவூற்றணை பொன்னம்மாளின் மிக முக்கிய அரசியல் பங்களிப்புகளில் ஒன்று. அது மட்டுமின்றி மஞ்சளாறு திட்டம், சாத்தயாறு திட்டம், குள்ளக்கோம்பைத் திட்டம், ஆலங்குளம் அணைக்கட்டுத் திட்டம் உடனடியாக முடிக்க வேண்டும் என 1960 ஆண்டு வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

14 மார்ச் 1960 அன்று சட்டமன்ற பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்ட பொன்னம்மாள், அம்பர் சர்க்கா திட்டம் மூலம் கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளார். கூடவே கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க மூன்று ஆண்டு காலம் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் பயிற்சிக்கு முன்பு கிராமப்புறங்களில் கட்டாயம் வேலை செய்தாக வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்படுத்தும்படி அரசுக்கு ஆலோசனை கூறினார்.

25 மார்ச் 1960 ஆம் ஆண்டு நரிக்குறவர்கள் நலன் குறித்து சட்டமன்ற கேள்வி நேரத்தில் முன்னாள் அமைச்சர் கக்கனிடம் அவர்களுக்கு நிலங்கள் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இவர் தனது அரசியல் வாழ்க்கையில் ஏழு முதல்வர்களை சந்தித்திருக்கிறார். கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களுக்கும் மூத்த உறுப்பினர் என்ற வகையில் பதவிப் பிராமணம் செய்து வைத்திருக்கிறார்.

காமராஜர் ஆதரவுடன் அரசியலுக்கு வந்த பொன்னம்மாள், அவரது மறைவுக்குப் பிறகு ஜி.கே. மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரசில் இணைந்து செயலாற்றினார். பொன்னம்மாளின் முயற்சியின் விளைவாக நிலக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு ப. சிதம்பரம் தொடங்கிய காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையில் இணைந்தார். ஆனால் அடுத்த தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2002 ஆம் ஆண்டு அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்ட பொன்னம்மாள், சமூகப் பணிகளை மட்டும் தொடர்ந்தார். இவருடைய பெயர்த்தி ஜெயராணி ஒரு இதழியலாளர் ஆவார்.[8]

இவருடைய சட்டமன்ற உரைகளை எழுத்தாளர் திலகபாமா, 'அக்கா - ஏ. எஸ். பொன்னம்மாள் சட்டமன்ற சரிதம்' என்ற நூல் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார்.

விருது

தமிழக அரசின் 2006ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது.[9][10][11]

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 'பெருந்தலைவர் காமராஜர்' விருது பொன்னம்மாளுக்கு வழங்கப்பட்டது.

மறைவு

2015 ஆம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஏ.எஸ். பொன்னம்மாள் சிகிச்சை பலனின்றி (வயது 86) 24 நவம்பர் 2015 அன்று காலமானார்.[12]

மேற்கோள்கள்

  1. "காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் காலமானார்". தினமலர். Retrieved 24 நவம்பர் 2015.
  2. http://m.thehindu.com/news/national/tamil-nadu/seventime-mla-as-ponnammal-passes-away/article7912731.ece
  3. Nilakottai (State Assembly Constituency)
  4. Palani (State Assembly Constituency)
  5. Madras State legislative assembly election, 1962
  6. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 390-392.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  7. லூயிஸ், நிவேதிதா (2022). பாதை அமைத்தவர்கள் (1st ed.). ஹெர் ஸ்டோரிஸ். p. 193.
  8. திலகபாமா, திலகபாமா (2021). அக்கா - ஏ. எஸ். பொன்னம்மாளின் சட்டமன்ற சரிதம். காவ்யா பதப்பகம்.
  9. பெருந்தலைவர் காமராசர் விருது
  10. http://www.hindu.com/2007/04/08/stories/2007040815900500.htm%7Ctitle=Court verdict on reservation is against social justice|publisher=The Hindu|date=8 April 2007
  11. http://www.hindu.com/gallery/0464/046406.htm
  12. காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.எஸ். பொன்னம்மாள் மறைவு

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஏ._எஸ்._பொன்னம்மாள்&oldid=302232" இலிருந்து மீள்விக்கப்பட்டது