ஏர்வாடி இராதாகிருஷ்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இராதாகிருஷ்ணன் என்பவர் நாடக ஆசிரியர்,சிறுகதை எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி எனும் ஊரில் 18-05-1947 இல் பிறந்தார். பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றிக் கொண்டே கவிதை, சிறுகதைகள் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்.

எழுத்துப் பணிகள்

இவர் வானொலி நிலையத்தில் பணியாற்றும் போது கட்டுரை, கவிதைகள் எழுதி அதை வானொலியில் வாசித்தார். இவர் முதலில் எழுதிய சிறுகதை பிரபல இதழில் வெளியாகவில்லை. அக்கதையை, 'அமுதசுரபி' எனும் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு அனுப்பினார். அப்போட்டியில் அக்கதையே முதல் பரிசு பெற்றது.இவர் எழுதிய முதல் நூல் உனக்காக ஒரு பாடல் என்பது. இந்நூல் வானொலி, தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பான இவரது இசைப்பாடல்கள் அடங்கியத் தொகுப்பாகும்.

படைப்புகள்

இவர் எழுதிய நூல்கள் :

  • என் பக்கம்
  • வருகிறாள் உன்னைத் தேடி (நகைச்சுவை நூல்)
  • கண்ணில் தெரியுது வானம்
  • நிழல்கள் பொய்யல்ல (கதை)
  • கனவின் பெயர் கவிதை (கவிதை)
  • காதல் வெறும் கதையல்ல (கவிதை)
  • மனத்தில் பதிந்தவர்கள் (வாழ்க்கை வரலாறு)

திரைப்பட பாடல்கள்: இயக்குநர் மோகன்காந்திராமனின், ஆனந்த பைரவி எனும் திரைப்படத்தில் ஒரு பாடலும், மலையாளத் திரைப்பட இயக்குநர் கோபாலகிருஷ்ணனின், தாகம் தீராத மேகம் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் இவர் எழுதியுள்ளார்.

விருதுகள்

கவிதை உறவு எனும் இலக்கிய அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகின்றார். இதன் மூலம் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த நூலுக்கு ரூபாய் ஒரு இலட்சம் வரை பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவரது, திருமணங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல' என்ற சிறுகதைத் தொகுதி தமிழ்வளர்ச்சித் துறையின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான முதல் பரிசு பெற்றது. இவர், கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

உசாத்துணை

1) கி.தமிழரசி," ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணனின் தமிழ்ப் படைப்புகள்- ஓர் ஆய்வு"- சென்னைப் பல்கலைக்கழகம் ஆய்வேடு. 2) அகில், " கலைமாமணி இராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்க்காணல்" www.tamilauthuors.com. 3) தேவிரா, " தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்" ஸ்ரீநந்தினி பதிப்பகம்,சென்னை-2007.

"https://tamilar.wiki/index.php?title=ஏர்வாடி_இராதாகிருஷ்ணன்&oldid=15792" இருந்து மீள்விக்கப்பட்டது