ஏர்னெஸ்ட் மக்கின்டயர்
ஏர்னெஸ்ட் தளையசிங்கம் மாக்கின்டயர் (Ernest Thalayasingam MacIntyre,[2] பிறப்பு: 26 செப்டம்பர் 1934) இலங்கையைச் சேர்ந்த ஆங்கில நாடகாசிரியர் ஆவார். இவர் இலங்கை ஆங்கில நாடக மேடைகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பரவலாக அறியப்பட்டவர்.[3]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஏர்னெஸ்ட் மக்கின்டயர் Ernest MacIntyre |
---|---|
பிறப்புபெயர் | ஏர்னெஸ்ட் தளையசிங்கம் மக்கின்டயர் |
பிறந்ததிகதி | 26 செப்டம்பர் 1934 |
பிறந்தஇடம் | கொழும்பு, இலங்கை |
பணி | நாடக ஆசிரியர் |
தேசியம் | இலங்கையர்/ஆத்திரேலியர் |
கல்வி | இளங்கலை (பேராதனைப் பல்கலைக்கழகம்) சம்பத்தரிசியார் கல்லூரி(யாழ்ப்பாணம்) |
பணியகம் | பேராதனைப் பல்கலைக்கழகம், அக்குவைனாசு பல்கலைக்கழகக் கல்லூரி (பணிப்பாளர்)[1] |
அறியப்படுவது | நாடக ஆசிரியர், நாடக எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | He Still Comes From Jaffna Rasanayagam's Last Riot |
வாழ்க்கைச் சுருக்கம்
எர்னெஸ்ட் மக்கின்டயர் கொழும்பு நகரில்[4] 1934 செப்டம்பர் 26 இல் பிறந்தார்.[5] யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் தங்கியிருந்து கல்வி கற்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] 1960களில் மெக்கின்டயர் இலங்கையில் மிக வெற்றிகரமான ஆங்கில நாடகாசிரியராகப் பாராட்டப்பட்டார். 'Stage and Set' என்ற நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்து பல பன்னாட்டு நாடகங்களையும் மற்றும் தான் எழுதிய நாடகங்களையும் மேடையேற்றினார்.[5][6]
1961 முதல் 1967 வரை இலங்கை வான்படையில் பணியாற்றினார். பின்னர் 1969-69 காலப்பகுதியில் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியின் நாடகப் பள்ளியில் பணிப்பாளராகப் பணியாறினார். 1969 முதல் 1973 வரை யுனெஸ்கோ திட்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.[1][5]
1974 ஆம் ஆண்டில் இவர் ஆத்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த போதிலும், இலங்கை சென்று பல நாடகக் கலைஞர்களைப் பயிற்றுவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டில், எஃப். சி. லுடோவிக்கின் He Comes from Jaffna என்ற நாடகத்தை சிட்னியில் மேடையேற்றினார்.[3] 2011-13 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[4]
2009 இல் "Antigone in Sri Lanka as IRANGANI" என்ற நாடகத்தை எழுதினார்.[7] 2009 ஆம் ஆண்டில் இந்நாடகம் சிட்னியிலும், 2010 ஆம் ஆண்டில் கான்பராவிலும் மேடையேறியது.[8] 2011 ஆம் ஆண்டில் இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றப்பட்டது.
படைப்புகள்
- The Full Circle of Caucasian Chalk, 1967[5]
- The President of the Old Boys' Club[5]
- He Still Comes From Jaffna[3]
- Let's Give Them Curry, 1981[9]
- The Education of Miss Asia, 1971[1][10]
- Rasanayagam's Last Riot, 1990[3]
- The Loneliness of the Short-Distance Runner, 1991: புதுதில்லி[11]
- A Somewhat Mad and Grotesque Comedy, 1991: புதுதில்லி[5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 Ekanayake, C.. "An asian comedy". Sunday Observer (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 2011-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110805181426/http://www.sundayobserver.lk/2007/01/28/mag06.asp.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-07-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110706205030/http://ariel.synergiesprairies.ca/ariel/index.php/ariel/article/viewFile/3010/2955.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Sriskanthadas, Bhagavadas (2007-05-20). "Jaffna and Colombo". The Nation இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303173135/http://www.nation.lk/2007/05/20/eyefea4.htm.
- ↑ 4.0 4.1 குலசேகரம் சஞ்சயன் (28 March 2016). "கொள்கைக்காக உயிரைத் துறந்தவன் தான் என் மிகச் சிறந்த படைப்பு" (தமிழ்). சிட்னி: சிறப்பு ஒலிபரப்புச் சேவை.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 "Macintyre, Ernest". The Australia Literature Resource. http://www.austlit.edu.au/run?ex=ShowAgent&agentId=A%23h;. பார்த்த நாள்: 4 அக்டோபர் 2010.
- ↑ Chandrarathne, Ranga (2008-07-27). "Impressions on the sand of time". Sunday Observer இம் மூலத்தில் இருந்து 2012-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121011175347/http://www.sundayobserver.lk/2008/07/27/imp03.asp.
- ↑ "Irangani: It’s 5th century Antigone set in 80s Sri Lanka". சண்டே டைம்சு. 16 செப். 2012. http://www.sundaytimes.lk/120916/plus/irangani-its-5th-century-antigone-set-in-80s-sri-lanka-12196.html. பார்த்த நாள்: 30 மார்ச் 2016.
- ↑ "Antigone in Sri Lanka as IRANGANI". Riverside Archives. https://riversideparramatta.com.au/show/antigone-in-sri-lanka-as-irangani/. பார்த்த நாள்: 30 March 2016.
- ↑ Migration, Dispossession, Exile, and the Diasporic Consciousness by Nandan, Satendra in Mohanram, Radhika. Shifting continents - colliding cultures. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-420-1271-4. http://books.google.com/books?id=on1uZNcdsScC&pg=PA19&lpg=PA19&dq=Let%27s+Give+Them+Curry&source=bl&ots=U4NjLnTEXp&sig=wP1YAPyDedZ8VLc46psGzrjKOIU&hl=en&ei=hkmuTP2HHsSclgfZjMHnDw&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CCQQ6AEwBA#v=onepage&q=Let%27s%20Give%20Them%20Curry&f=false.
- ↑ The Don (1997-06-22). "Where subtlety, stagecraft held sway". Sunday Times. http://www.sundaytimes.lk/970622/plus7.html.
- ↑ Dissanayake, Aditha (2007-10-19). "Mirror of a changing nation: Review of An Anthology of Sri Lankan English Literature". Asian Tribune. http://www.asiantribune.com/index.php?q=node/7868.