ஏணிப்படிகள் (மலையாளத் திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏணிப்படிகள்
இயக்கம்தோப்பில் பாசி
கதைதகழி சிவசங்கரப் பிள்ளை
தோப்பில் பாசி (உரையாடல்)
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஜி. தேவராஜன்
சுவாதி திருநாள்
நடிப்புமது
சாரதா
ஜெயபாரதி
கவியூர் பொன்னம்மா
ஒளிப்பதிவுபி. இராமசாமி
படத்தொகுப்புஜி. வெங்கடராமன்
கலையகம்கேபிஏசி பிலிம்ஸ்
விநியோகம்கேபிஏசி பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 9, 1973 (1973-02-09)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

ஏணிப்படிகள் என்பது தோப்பில் பாசி இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாளத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் மது, சாரதா, ஜெயபாரதி, கவியூர் பொன்னம்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு ஜி. தேவராஜன் இசை அமைத்தார். திருவிதாங்கூர் மன்னர் சுவாதி திருநாளின் இசையமைப்புகளும் படத்தில் பயன்படுத்தப்பட்டன. [1] [2] [3]

கதைச் சுருக்கம்

சாதாரன குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு தலைமைச் செயலகத்தில் பணி கிடைக்கிறது. அங்கு பணிபுரியும் உயர் அலுவலரின் உறவினர் பெண்ணை காதலில் வீழ்த்தி பதவி உயர்வு பெற்று கண்காணிப்பாளர், துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் என உயர்கிறான். இப்படமானது அதிகார வர்கத்தின் அரசியலைப் பேசுவதாக உள்ளது.

நடிகர்கள்

இசை

ஜி. தேவராஜன் மற்றும் சுவாதி திருநாள் இசையமைத்த இப்படத்தின் பாடல் வரிகளை வயலார், சுவாதி திருநாள், ஜெயதேவர், இராயிமன் தம்பி ஆகியோர் எழுதினர்.

இல்லை. பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 "கனககுன்னில் நின்னு" பி. மாதுரி வயலார்
2 "ஒன்னாம் மானம் பூமானம்" கே. ஜே. யேசுதாஸ் வயலார்
3 "பங்கஜாக்ஷன் கடல்வர்ணன்" பி. லீலா, கோரஸ் வயலார்
4 "பிராணநாதனினக்கு நல்கியா" பி.மாதுரி இராயிம்மன் தம்பி
5 "சரசா சுவதானா" எம்.ஜி.ராதாகிருஷ்ணன், நெய்யட்டிங்கரா வாசுதேவன் சுவாதி திருநாள்
6 "ஸ்வாதந்த்ரியம்" பி. ஜெயச்சந்திரன், பி. மாதுரி வயலார்
7 "யாஹி மாதவா" பி. மாதுரி, கோரஸ் ஜெயதேவர்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்