எஸ். முத்துமீரான்
Jump to navigation
Jump to search
எஸ். முத்துமீரான்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எஸ். முத்துமீரான் |
---|---|
பிறந்தஇடம் | நிந்தவூர், மட்டக்களப்பு |
தேசியம் | இலங்கை |
அறியப்படுவது | சட்டத்தரணி,ஈழத்து எழுத்தாளர் |
எஸ். முத்துமீரான் இலங்கையின் எழுத்தாளரும், கவிஞரும், நாட்டாரியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் ஆவார். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் சகல துறைகளிலும் எழுதியவர். இலங்கை வானொலியில் தடாகங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார்
எழுதிய நூல்கள்
- கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம்
- கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்
- இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள்
- இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள்
- இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய் மொழிக் கதைகள்
- கிழக்கிலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பூர்வீகமும் – வாழ்வும் வாழ்வாதாரங்களும்
ஆகிய என்னும் ஆறு நாட்டார் இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவற்றுடன் மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், மூன்று கவிதைத் தொகுதிகளையும், இரண்டு உருவகக்கதைத் தொகுதிகளையும், ஒரு நாடகத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.
விருதுகள்
- இலக்கிய வேந்தன் - கலாச்சார அமைச்சு 2002
- சாகித்திய பரிசு – வ.கி.கலாச்சார அமைச்சு 1994
வெளி இணைப்புகள்
- செம்மொழி மாநாட்டில் ஆய்வாளராக கலந்து கொள்ளும் முத்துமீரான்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், ஜூன் 6, 2010