எஸ். மீனாட்சிசுந்தர முதலியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஈரோடு மீனாட்சிசுந்தர முதலியார் அல்லது எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் (S. Meenakshi Sundara Mudaliar, 25 டிசம்பர், 1898 - 14 மார்ச், 1973)[1] என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளரும், அரசியல்வாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தவர். ஈரோடு வட்டாரத்தில் பெண்களின் கல்விக்காக பாடுபட்டவர். ஈரோடு நகர மக்கள் இவரை "ஐயா" என்று அன்போடு அழைத்தனர்.[2][3]

வாழ்க்கைக் குறிப்பு

மீனாட்சிசுந்தர முதலியார் 1898 ஆம் ஆண்டு அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் ஓர் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் இருந்து கல்வியில் ஆர்வம் கொண்ட இவர் இளங்கலை இலக்கியம் வரை படித்தார்.

1952 முதல் 1955 வரை ஈரோடு நகராட்சித் தலைவராகப் பணியாற்றி பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.[4]

பெண்கள் கல்வி வளர்ச்சியில்தான் சமூகத்தின் வளர்ச்சி உள்ளது என்பதை உணர்ந்த இவர், தனது சொந்த செலவில் கலைமகள் கல்வி நிலையம் என்ற மகளிர் பள்ளியைத் துவக்கி லட்சக்கணக்கான பெண்கள் கல்வியில் உயர்நிலை பெற காரணமானார்.[5] ஈரோட்டில் செங்குந்தர் கல்விக்கழகம் என்ற அமைப்பை வி. வி. சி. ஆர். முருகேச முதலியார், ஜ. சுத்தானந்தன் முதலியார் உள்ளிட்டோருடன் சேர்ந்து துவக்கினார். இன்று செங்குந்தர் கல்விக்கழகத்தால் பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது.[6] 1972 ஆம் ஆண்டில் சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட "கலைமகல் கல்வி நிலயம்" நிர்வாகக் குழு 7 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பொது அறக்கட்டளையை உருவாக்கி, இவர் உருவாக்கிய கலைமகள் கல்வி நிலையத்தை ஈரோடு பொது மக்களுக்கு அர்ப்பணித்தார்.

வரலாற்றில் ஆர்வம் கொண்ட இவர், ஈரோட்டில் கலைமகள் பள்ளி வளாகத்தில் "கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்" என்ற பெயரிலான அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்தார்.[7]

அங்கீகாரங்கள்

  • இவரின் நினைவாக 2019 ஆம் ஆண்டு ஈரோட்டின் பிரதான சாலைக்கு மீனாட்சிசுந்தரனார் சாலை என்று பெயர் வைக்கபட்டது.[8]
  • ஈரோடு செங்குந்தர் கல்விக்கழகம் இவரின் நினைவாக, மீனாட்சிசுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியை நடத்தி வருகிறது.[9] பள்ளி வளாகத்தில் இவருக்கு வைக்கப்பட்ட சிலை, குன்றக்குடி பொன்னம்பல அடிக்களாரால் திறந்து வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "செங்குந்தர் கல்விக்கழக நிறுவனர்களின் சிலை திறப்பு விழா" (in தமிழ்). தினமணி. 2012. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/2012/mar/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-466034.html. 
  2. "About Kalaimagal" (in ஆங்கிலம்). Erode Kalaimakal Kalvi nilayam school.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்". தமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண். 2012.
  4. "About Kalaimagal" (in ஆங்கிலம்). Erode Kalaimakal Kalvi nilayam school.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. https://books.google.co.in/books?id=0_YnDgAAQBAJ&pg=PP3&lpg=PP3&dq=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&source=bl&ots=dMSMTPuUBc&sig=ACfU3U2cY101IVel5MRpVtDBzf3auBehnw&hl=en&sa=X&ved=2ahUKEwjWyZr0rsrpAhWrwjgGHSWiAjU4ChDoATAHegQIBxAB#v=onepage&q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&f=false[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "செங்குந்தர் கல்விக்கழக நிறுவனர்களின் சிலை திறப்பு விழா" (in தமிழ்). தினமணி. 2012. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/2012/mar/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-466034.html. 
  7. "கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்". தமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண். 2012.
  8. "மீனாட்சி சுந்தரனார் சாலை பெயர் பலகை திறப்பு" (in தமிழ்). தினகரன். 2019 இம் மூலத்தில் இருந்து 2019-11-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191126172220/http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=969352. 
  9. "சுத்தானந்தன் பிறந்த நாள் விழா" (in தமிழ்). தினமலர். 2012. https://m.dinamalar.com/detail.php?id=555600.