எஸ். பி. சத்தியபாமா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எஸ். பி. சத்தியபாமா |
---|---|
பிறந்ததிகதி | செப்டம்பர் 17, 1959 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
எஸ். பி. சத்தியபாமா புகைப்படத்திற்கு நன்றி வல்லினம் மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'எஸ். பி. பாமா' எனும் புனைப்பெயரால் எழுத்துத்துறையில் நன்கறியப்பட்ட இவர் வானொலி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1980 முதல் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்ற இவர் சிறுகதைகள், கட்டுரைகள், திறனாய்வு, வானொலி நாடகங்கள், தொடர் நாடகங்கள், வானொலிக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
நாவல்
- தாயாக வேண்டும், உமா பதிப்பகம், 2009
- இன்னொரு முகம், சுயவெளியீடு, 2017
சிறுகதை தொகுப்பு
- அது அவளுக்குப் பிடிக்கல, இளம்பிறை பதிப்பகம். சென்னை, 2004
- தேடிவந்த லட்சுமி, வேணி,தணிகை, சென்னை, 1981
வானொலி நாடகம் [வானில் மிதந்த தேனொலி]
"விக்கிரம் கண்ட விசித்திர வழக்குகள்", "தான் என்ற சிறை" போன்ற வானொலித் தொடர் நாடகங்கள் ஒலிநாடாக்களாக வெளியிடப்பட்டுள்ளதுடன், "ஓடும் மேகங்கள்", "வேண்டும் உந்தன் உறவு" ஆகிய நாடகங்களை மலேசியத் தொலைக்காட்சியில் எழுதி இயக்கியும் உள்ள இவர் மலேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- விக்ரம் கண்ட விசித்திர வழக்குகள், சுயவெளியீடு, 1994
- தான் என்ற சிறை, சுயவெளியீடு, 1994
பரிசுகளும் விருதுகளும்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைக்கான மாதாந்திர பவுன் பரிசு (2003)
- மலேசிய பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தினத்தில் சிறப்பு பரிசு(2002)
- தமிழ் நேசனின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையான சிறுகதைகள் தேர்வில் இரண்டாம் பரிசு (2003)
உசாத்துணை
எஸ்.பி. பாமா சிறுகதைகள் : கலையமைதியை விழுங்கி தீவிரம் - அ.பாண்டியன் ஒலிப்பேழை யூடியூப் சானல்