எஸ். நாகராஜா
சின்னத்தம்பி நாகராஜா (28 பெப்ரவரி 1931 – 8 மே 2008) என்னும் முழுப் பெயர் கொண்ட சி. நாகராஜா ஒரு இலங்கைத் தமிழ் வழக்கறிஞர். இவர் யாழ்ப்பாண மாநகர முதல்வராகவும், யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இளமைக்காலம்
நாகராஜா 1931ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ம் தேதி பிறந்தார்.[1] இலங்கையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், மேற் படிப்புக்காகத் தமிழ்நாடு சென்று மதராசு கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே ஆங்கில இலக்கியத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றார்.[1]
தொழில்
நாகராஜா இலங்கையில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சட்டத்தரணியாகத் தொழில் புரிந்தார். யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வென்ற நாகராஜா, 1966ல் மாநகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 1981ல் புதிதாக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையின் துணைத் தலைவராகத் தேர்வான இவர், 1982. அப்பதவியை விட்டு விலகினார். சில காலம் அவர் வன்னிப்பகுதியில் வாழ்ந்து வந்தார்.
இறுதிக்காலம்
1990களில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூ செர்சிக்குக் குடி பெயர்ந்த நாகராஜா, 2008ம் ஆண்டில் அங்கேயே காலமானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Former Mayor of Jaffna passes away". TamilNet. 9 May 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25583.
- ↑ "Past Mayors". Jaffna Municipal Council இம் மூலத்தில் இருந்து 2013-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131018074128/http://www.jaffnamc.lk/english/municipal_council_past_mayors.php.