எஸ். குலேந்திரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அதி வணக்கத்துக்குரிய
எஸ். குலேந்திரன்
யாழ் ஆயர்
சபை தென்னிந்தியத்
திருச்சபை
மறைமாவட்டம் யாழ்ப்பாணம்
ஆட்சி துவக்கம் 1947
ஆட்சி முடிவு 1970
பிறப்பு 23 செப்டம்பர் 1900
இறப்பு 14 பெப்ரவரி 1992
(அகவை 91)
படித்த இடம் பரி. யோவான்
கல்லூரி,
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணக்
கல்லூரி,
செரம்பூர்
கல்லூரி


அதி வணக்கத்துக்குரிய சபாபதி குலேந்திரன் (Sabapathy Kulendran, 23 செப்டம்பர் 1900 – 14 பெப்ரவரி 1992) இலங்கைத் தமிழ்க் குருக்களும், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முதலாவது ஆயரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

குலேந்திரன் 1900 செப்டம்பர் 23 அன்று வழக்கறிஞர் சபாபதி என்பவருக்குப் பிறந்தார். குலேந்திரனின் சாம் சபாபதி யாழ்ப்பாண நகர முதல்வராக இருந்தவர். குலேந்திரன் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் பெற்றார்.பின்னர் இந்தியாவில் மேற்கு வங்கத்தில் உள்ள செரம்பூர் கல்லூரியில் இறையியலில் பட்டம் பெற்றார். 1934-ஆம் ஆண்டில் மதப்போதகராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

குலேந்திரன் யாழ்ம்மாணம் இளைஞர் காங்கிரசின் உறுப்பினராக இருந்து சேவையாற்றினார்.

குலேந்திரன் விசுவலிங்கம் என்பவரின் மகள் மதுரம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

பணி

குலேந்திரன் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் 1வது ஆயராக 1947 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 ஆம் ஆண்டில் இளைப்பாறினார்.

மறைவு

இளைப்பாறிய பின்னர் வட்டுக்கோட்டையில் வாழ்ந்து வந்த குலேந்திரன் 1992 பெப்ரவரி 14 இல் இறந்தார்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._குலேந்திரன்&oldid=2502" இருந்து மீள்விக்கப்பட்டது