எஸ். எஸ். தென்னரசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ். எஸ். தென்னரசு
எஸ். எஸ். தென்னரசு
இயற்பெயர்/
அறியும் பெயர்
எஸ். எஸ். தென்னரசு
பணி எழுத்தாளர், அரசியல்வாதி

எசு. எசு. தென்னரசு (S. S. Thennarasu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவரது இயற்பெயர் சிந்தாமணி. ஒர் எழுத்தாளராகவும் இவர் அறியப்படுகிறார்.1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சிறு கதை எழுத்தாளராக எசு. எசு. தென்னரசு தமிழில் பிரபலமான சிறுகதைகளை எழுதியுள்ளார். தென்னரசு எழுதிய நூற்களை தமிழ்நாடு அரசு 2007 - 08 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கியுள்ளது.[2][3]

படைப்புகள்

  1. அவள் ஒரு கர்நாடகம்
  2. ஆனந்தபைரவி (புதினம்)
  3. இவர்தான் கலைஞர்
  4. கண்மணி (புதினம்); 1956; அருணோதயம், சென்னை. [4]
  5. கருணைக்கு அழிவில்லை
  6. குஞ்சரத்தின் கதை (புதினம்)
  7. கோபுரக் கலசம்
  8. சந்தனத்தேவன் (புதினம்)
  9. சந்தனமழை (நாடகம்); 1956; அருணோதயம், சென்னை.[4]
  10. சுமங்கிலியின் சுயசரிதம் (புதினம்)
  11. செம்மாதுளை (புதினம்)
  12. சேது நாட்டு செல்லக்கிளி
  13. தங்கச்சி மடம் (புதினம்)
  14. தலைநகரம் (நாடகம்)
  15. தளபதி (நாடகம்)
  16. துங்கபத்திரை (நாடகம்)
  17. தேவாலயம் (நாடகம்); 1956; அருணோதயம், சென்னை.[4]
  18. தைமூரின் காதலி
  19. நகமும் சதையும் (புதினம்)
  20. பாடகி (புதினம்)
  21. பெண்ணில்லாத ஊரிலே (சிறைச்சாலை நினைவலைகள்)
  22. மயிலாடும்பாறை (புதினம்) [5]
  23. மலடி பெற்ற பிள்ளை
  24. மிஸஸ்.இராதா (புதினம்)
  25. ராஜபவனம் (புதினம்)
  26. வைராக்கியம் (புதினம்)

தொகுப்பு நூல்கள்

  1. எஸ். எஸ். தென்னரசின் நாவல்கள்
  2. எஸ். எஸ். தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்

பட்டங்கள்

தென்னரசிற்குப் பின்வரும் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன:

  1. சிறுகதை மன்னன்
  2. சின்னமருது
  3. இயற்செல்வம்


மேற்கோள்கள்

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "தமிழகம். வலை தளத்தில்,எஸ்.எஸ்.தென்னரசு எழுதிய நூல்கள்". Archived from the original on 2012-06-25. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  3. திரு.எஸ்.எஸ்.தென்னரசு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
  4. 4.0 4.1 4.2 திராவிடநாடு, 2-9-1956, பக்.15
  5. இனமுழக்கம், 25-11-1960, பக்.9
"https://tamilar.wiki/index.php?title=எஸ்._எஸ்._தென்னரசு&oldid=3579" இருந்து மீள்விக்கப்பட்டது