எஸ். எம். ராமநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எஸ். எம். ராமநாதன் (S. M. Ramanathan, இறப்பு: 18 டிசம்பர் 1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடக, மற்றும் திரைப்பட நடிகர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

ராமநாதன் நகைச்சுவை நடிகை மனோரமாவின் கணவர் ஆவார். நாடகங்களில் நடித்து வந்தவர். 1959 இல் வெளியான கண் திறந்தது திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். தேடிவந்த லட்சுமி, கறுப்புப் பணம், கருந்தேள் கண்ணாயிரம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்தார்.[1]

ஒரே நாடகக் கம்பனியில் நடித்து வந்த மனோரமாவை 1964 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார்.[2] ஆனாலும் மகன் பூபதி பிறந்து 15 நாட்களிலேயே இருவரும் பிரிந்தனர்.[3] அதன் பின்னர் நாடக நடிகையான பங்கஜம் என்பவரை மணந்தார்.[1]

நடித்த திரைப்படங்கள்

மறைவு

இராமநாதன் 1990 டிசம்பர் 18 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Ramanathan.S.M (மனோரமாவின் கணவர்)". Antru Kanda Mugam. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2016.
  2. "Biography of 'Aachi'-Manorama-Guinnes Record- Tamil Actress". Infoqueenbee. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2016.
  3. "Potpourri of titbits about Tamil cinema - Manorama". Kalyanamalai Magazine. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2016.
"https://tamilar.wiki/index.php?title=எஸ்._எம்._ராமநாதன்&oldid=21556" இருந்து மீள்விக்கப்பட்டது